பக்கம் எண் :

60ஊரும் பேரும்

மணவிற் கோட்டத்தின் தலைநகர் மணவில் என்பதாகும். அஃது இப்பொழுது
மணவூர் என மாறியுள்ளது.

    இன்னும் இல் என்னும் பெயருடைய சில ஊர்கள், பண்டைப்
புலவர்கள் பெயரோடு இணைத்துச் சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றன.
அரிசில் என்னும் ஊரிற் பிறந்த புலவர் அரிசில் கிழார் என்றும், அஞ்சில்
என்னும் ஊரிலே தோன்றியவர் அஞ்சில் ஆந்தையார் என்றும், பொருந்தில்
என்ற ஊரைச் சார்ந்தவர் பொருந்தில் இளங்கீரனார் என்றும், கள்ளில் என்ற
ஊரிற் பிறந்தவர் கள்ளில் ஆத்திரைய ரென்றும் பழைய நூல்களிற்
குறிக்கப்படுகின்றனர்.
 

அகம்

    அகம் என்னும் சொல்லும் சில ஊர்ப் பெயர்களில் அமைந்திருக்கின்றது.
அமைந்திருக்கின்றது. அச் சொல்லும் முதலில் வீட்டுக்கு அமைந்து, அப்பால்
வீடுகளையுடைய ஊரைக் குறித்தது போலும்; திரு ஏரகம் என்பது ஓர்
ஊரின் பெயர். அது முருகனது படை வீடுகளில் ஒன்றாகும். பாண்டி
நாட்டில் வைகையாற்றங்கரையில் திரு ஏடகம் என்னும் ஊர் உள்ளது.
இராமநாதபுரத்தில் மருதகம், கையகம் முதலிய பெயருடைய ஊர்கள்
காணப்படுகின்றன. திருச்சி நாட்டில் கல்லகம் என்பது ஓர் ஊரின் பெயர்.
 

உள்

      உள் என்னும் சொல் மிக அரிதாக ஊர்ப் பெயரிலே காணப்படும்.
சென்னை மாநகர்க்கு இருபத்தைந்து மைல் தூரத்தில் வைணவத்
திருப்பதிகளில் ஒன்றாகிய எவ்வுள் என்னும் ஊர் உள்ளது. திருமங்கை
யாழ்வாரும் திருமழிசை