இதற்குக் காரணங்கள் பல உண்டு. மேற் குறிப்பிட்ட மாறுபட்ட சூழ்நிலைகள், காலநிலைகள் ஆகியவை அவற்றுள் சில. மேலும் அமெரிக்கக் குடியேற்றம் ஏற்பட்டகாலம் ஆங்கில அரசியல் பயிற்சிப் பருவத்திலேயிருந்த காலம். முதல் சார்லஸ் காலத்து அரசியலுரிமைப் போரும் மூன்றாம் வில்லியம் காலத்துப் புகழ்மிக்க புரட்சியும் அதன்பின் ஹானோவரியர் ஆட்சிக் காலமுதல் தொடங்கிய அமைச்சர் குழுப் பொறுப்பாட்சி முறையும் வளர்ச்சிக்காலச் சீர்திருத்தங்களும் அன்று ஏற்பட வில்லை. எனவே ஆங்கில மக்கள் முதிரா இளங்கருத்துக்களையே தாய் நாட்டுடன் பொதுவான வரன்முறைச் செல்வமாகக் கொண்டு அமெரிக்கர் அதனைத் தம் இயல்புக்கும் சூழ்நிலைக்கும் ஒப்பத் தமக்கெனத் தனி வளர்ச்சி முறைகளோடு மேற்கொண்டனர் என்பது தெளிவு. அமெரிக்க அரசியலின் வேறுபாடுகளுள் தலைமை வாய்ந்த செய்தி அமெரிக்கநாடு ஆங்கிலநாட்டிலும் மிகப்பெரிய பரப்பு உடையதாயிருந்தது என்பதே. அதில் ஆங்கிலநாட்டைப்போன்று சமய அரசியல் வாழ்வு பண்புகளில் ஒருமைப்பாடு இல்லை. அதற்கு மாறாக வேறுபாடுகள் மிகுதியாயிருந்தன. எனவே ஆங்கிலநாட்டு அரசியல் போன்ற தனியாட்சி அரசியல் அந்நாட்டுக்கு ஏற்புடையதாக இல்லை. அமெரிக்க அரசியலில் ஒவ்வொரு குடியேற்றமும் தற்சார்புடைய ஒரு தனி அரசாகித் தனித்தனி தலைவரும் தனித்தனி அரசியல் மன்றும் ஆட்சிமுறையும் கொண்டது. ஆனால் அதேசமயம் பெருநிலப்பரப்பின் பொதுக்காரியங்களைக் கவனிக்கப் பொது அரசியலும் இன்றியமையாததாயிருந்தது. எனவே அத்தனி அரசி |