`ரோமர் கி.பி. 226இலும் முசிறியில் 840 முதல் 1200 வீரரையுடைய படை ஒன்று வைத்திருந்தார்களென்றும், அவ்விடத்தில் ஆகஸ்டசுக்கு ஒரு கோவில் கட்டப்பட்டிருந்ததாகவும் `Malabar Manualழு என்னும் நூல்கூறுவதாகக் கனகசபைப் பிள்ளை அவர்கள் "1800 வருடங்களுக்கு முற்பட்ட தமிழர்" என்னும் நூலில் காட்டியுள்ளார் (ப. 38)
நாகரிடமிருந்தே ஆரியர் எழுத்தெழுதும் முறையைக் கற்றார்கள். ஆகவே, அவர்களின் எழுத்துத் தேவ நாகரி எனப்படுகின்றது.-1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர், [ தேவநாகரி (தேவர் நகரிற் பேசப்படுவது) என்பதே தேவநாகரி யாயிற்று எனக் கூறப்படுகின்றது.]
சுமத்திராவிலே லபுதோவா என்னுமிடத்தில் ஒருசாசனம் கிடைத்தது. அதில் சக வருடம் 1010 குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அது குறித்த ஆண்டு 1088-க்குச் சரி. அச்சாசனம் ஆயிரத்தைவர் என்னும் கூட்டத்தினர் கொடுத்த நன்கொடையைப்பற்றிக் கூறுகின்றது. இச் சாசனத்தால் சுமத்திராவில் கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் பொதுமக்களின் சாசனங்களில் தமிழ் வழங்கிற்று என்பது வெளி