"மலைமேன் மரங்கொணர்ந்து மாண்புடைத்தாய்ச் செய்த நிலையொத்த வீதி நெடுமாடக் கூடல் விலைத்தயிர் கொள்ளீரோ வென்பாண் முலையிரண்டுஞ் சோழ னுறந்தைக் குரும்பையோ தொண்டைமான் வேழஞ்சேர் வேங்கடத்துக் கோங்கரும்போ ஈழத்துத் தச்சன் கடைந்த இணைச் செப்போ அச்சுற்றுள் அன்னமோ ஆய்மயிலோ ஆரஞர்நோய் செய்தாளை யின்னந் தெரிகிற் றிலம்" | (யாப்-விருத்தி-மேற்கோள்)` | |
மேற்காட்டிய செய்யுளால் ஈழத்துத் தச்சர் கைவினை சிறந்தவர்கள் எனப் புலப்படுத்துகின்றது. இராவணன் மயன் புதல்வியாகிய மண்டோதரியை மன்றல் புரிந்த வரலாறும் உற்று நோக்கற்பாலது. |
5. அரசாட்சி |
"திருக்கொண்டு பெருக்க மெய்திவீற் றிருந்து குற்றங் கெடுத்து விசும்பு தைவரக் கொற்றக் குடையெடுப் பித்து நிலநெளிய படைபரப்பி யாங்காங்குக் களிறி யாத்து நாடுவளம் பெருகக் கிளைகுடி யோம்பி நற்றாய்போல வுற்றது பரிந்து நுகத்துக்குப் பகலாணி போலவும் மக்கட்குக் கொப்பூழ் போலவும் உலகத்துக்கு மந்தரமே போலவும் நடுவு நின்று செங்கோலோச்சி யாறில்வழி யாறு தோற்று வித்துக் குளனில் வழிக் குளந்தொடு வித்து முயல் பாய்வழிக் கயல்பாயப் பண்ணியும் களிறு பிளிற்றும்வழி பெற்றம் பிளிற்றக் கண்டும் களிறூர் பலகாற் சென்று தேன்றோயவும் தண்புனற் படைப்பைத் தாகியும் குழைகொண்டு கோழி யெறிந்து இழைகொண் டான்றட்டும் | |