பக்கம் எண் :

117
 
நாட்டை வென்றான். ஹொய்சளரை முறியடித்து ஒதுக்கினான். காஞ்சிபுரம் தெலுங்கு
சோடரிடமிருந்து கைப்பற்றப்பட்டு, மதுரைக்கு அடுத்த இரண்டாந் தலைநகரமாயிற்று. சேர
மன்னர் அவனுக்குத் திறை செலுத்தினர். இலங்கையை அவன் வென்று நேரடியாக
ஆட்சி செலுத்தினான். மற்ற எந்தப் பேரரசரும் எளிதில் செய்திராத முறையில் அவன்
ஒரு தனி மனிதனாக நின்று ஓர் ஆட்சிக்காலத்துக்குள் தன் வாள்வலியால் ஒரு உறுதி
வாய்ந்த பேரரசை நிலைநாட்டினான். அதன் எல்லை முதலாம் பராந்தகன் சோழப்
பேரரசின் அளவாயிருந்தது. ஆனால் அதன் வலிமையும் செல்வாக்கும் புகழும்
தென்னாட்டில் எந்தப் பேரரசுக்கும் இல்லாத அளவில் இருந்தது.
 
சேமன் என்ற தலைவனின் வெல்லப்படாத கோட்டையாகிய கண்ணனூர்க்
கொப்பத்தையும், வாணிகச் செல்வத்தில் சிறந்த கோப்பெருஞ்சிங்கன் நகராகிய சேந்த
மங்கலத்தையும் அவன் வென்றான்.
 
     1253-ல் பாண்டியப் பேரரசின் எல்லை கர்நூல், திராட்சாராமம் வரை எட்டிற்று.
 
     தெலுங்கு சோட அரசன் கண்ட கோபாலனையும், காகதிய மரபின் அரசன்
கணபதியையும், பிற தெலுங்கு அரசரையும் அவன் முடுகூர் என்ற இடத்தில் வென்றான்.
 
     ஆட்சி இறுதியில் அவன் பேரரசனாக நெல்லூரில் வீராபிஷேகம் செய்து
கொண்டான்.
 
     'எம்மண்டலமும் கொண்டருளியவன்' 'மகாராஜாதி ராஜ ஸ்ரீ பரமேசுவரன்'
ஆகியவை அவன் விருதுப் பெயர்கள்.
 
     'போர்களில் சூறையாடிய செல்வக் குவியல்களையும் சேரர்,' கன்னடர்,
இலங்கையரிடமிருந்து திறையாகப் பெற்ற பொன்மணி களையும் செலவு செய்து அவன்
சிதம்பரத்திலுள்ள சிவன் கோவிலுக்கும், சீரங்கத்திலுள்ள திருமால் கோவிலுக்கும்