பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

இணைபிரியாமை = ஆணும் பெண்ணும் துணைபிரியா திருத்தல்.

இணையடித்தல் = முட்டுக்கால் தட்டுதல்.

இணையணை = பலவணை.

“இணையணை மேம்படத் திருந்து துயில்” (சிலப். 4 67)

இணைவன் = இணைந்திருப்பவன்.

“இணைவனா மெய்ப்பொருட்கும்”     (திவ். திருவாய். 2 8 1)

இணைவிழைச்சு = புணர்ச்சி.

“இணைவிழைச்சு தீதென்ப”     (இறை. 1, உரை, ப. 9)

இள் - (இய்) - இயை,

இயைதல் “என்போடியைந்த தொடர்பு” (குறள். 73). 2. இணங்குதல். 3. நிரம்புதல். “மாக்கடல்கண் டியைய மாந்தி” (திணைமாலை. 100).

(செ. குன்றாவி.) = ஒத்தல் (நன். 367).

இயைதல் - இயைத்தல் (செ. குன்றாவி.) = பொருந்துதல்.

இயைவு = சேர்க்கை (திவா.).

இயைவு - இயைபு = 1. புணர்ச்சி. (தொல். சொல். 308). 2. பொருத்தம். “பண்ணென்னாம் பாடற் கியைபின்றேல்” (குறள். 573).

3. இது கேட்டபின் இது கேட்கத்தக்க தென்னும் தொடர்பு முறை (நன். சிறப்புப். விருத்.) 4. எழுத்தொத்துவரும் தொடைவகை (யா. கா. உறுப். 16). 5. மெல்லின இடையின மெய்களுள் ஒன்றில் முடியும் செய்யுள்களைக் கொண்ட வனப்புவகை. (தொல். பொருள் 552).

இயை - இசை. இசைதல் (செ. குன்றியவி.) = 1. பொருந்துதல். 2. ஒத்துச் சேர்தல். 3. உடன்படுதல். “விண்பெறினு மிசையார்” (திருநூற். 83). 4. கிடைத்தல். “கனக மிசையப் பெறாஅது” (திருவாச. 2 39). 5. இயலுதல். “இசையா வொருபொருள்” (நாலடி. 111).

இசைத்தல் (செ. குன்றாவி.) = 1. கட்டுதல் (திவா.). 2. உண்டுபண்ணுதல். “இறுதியை யிசைத்த கந்தனை” (விநாயக பு.