பக்கம் எண் :

7

அமையம் - சமையம்.

அமர்தல் = 10. பொருந்துதல், கலத்தல், பொருதல், இருவர் அல்லது இரு படைகள் கலந்தே பொருதலால், கலத்தற் கருத்தில் பொருதற் கருத்துத் தோன்றிற்று.

ஒ. நோ : கைகலத்தல் = சண்டையிடுதல்.

கல - கலாம், கலகம். பொரு - போர். பொருதல் = பொருந்துதல், போர் புரிதல்.

அமர் M. amar = போர். அமர் - அமரம். அமர் - அமர்த்தல் = போரிடுதல், மாறுபடுதல்.

அமரி = போர்த்தெய்வமான காளி.

“பேதைக் கமர்த்தன கண்”         (குறள். 1084)

அமரகம் = போர்க்களம்.

“அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா”      (குறள். 814)

அமர் - சமர் - சமரம். சமம் = ஒப்பு, போர்.

ஒ. நோ : பொருதல் = ஒத்தல், போர்புரிதல். ஒத்தல் ஈண்டுக் கலத்தல்.

“ஒளிறுவாட் பொருப்ப னுடல்சமத் திறுத்த”     (பரிபா. 22 1)

அமர்க்களம் = போர்க்களம், ஆரவாரம். M. amarkkalam.

அம்முதல் = நு. அமுங்குதல், பதுங்குதல்.

அம் - அம்மி. M. ammi = அமுங்க நெருக்கியரைக்குங் கல்.

அம்முக்கள்ளன் = ஒன்றும் தெரியாதவன்போல் நடிக்குந் திருடன்.

அமர்தல் = 11. அமுங்க நெருங்கித் தழுவுதல்.

“அமரப் புல்லும்”             (திருக்கோ. 372)

அம்மு - அமுங்கு - அமுக்கு - அமுக்கி = இரவில் அமுக்குவது போன்ற தோற்றம். (nightmare).

அமுக்கடி = நெருக்கடி. அமுக்கன் = மறைவாக வினை செய்பவன்.

M. amunnuka (அமுங்ஙுக), amukkuka.

அமுக்கலான் = சிலந்தியை அமுக்கி நலமாக்கும் தழை.

அமுக்கம் = கமுக்கம்.

அம் - அமிழ், அமிழ்தல் = நீரில் அமுங்குதல்.