பக்கம் எண் :

71

10

‘உல்’ (உ) என்னும் வேர்ச்சொல்

உல்3 (உள்ளொடுங்கற் கருத்துவேர்)

உல் - உலகு. உல்குதல் = உள்வளைதல், ஒடுங்குதல், சிறுத்தல்,

உல் - உல்லி = ஒல்லி. உல்லி - ஒல்லி. ஒல்லொல்லி = மிக மெலிந்த ஆள்.

உல்லாடி - ஒல்லியான ஆள்.

உல்லாடி - ஒல்லாடி = மெல்லிய ஆள்.

உல் - உள் - உள்கு. உள்குதல் = உள்ளிழிதல், ஒடுங்குதல், மனந்தளர்தல்.

“சிந்தையுள்கி”          (இரகு. அயனுதய. 20)

உள்கு - உளுக்கு - உளுக்கா.

உளுக்காத்தல் = 1. சுவர் கீழிறங்குதல். 2. கீழிருத்தல், ஒடுங்கியிருத்தல், இருத்தல். “சோளேந்திர சிங்கனை உளுக்காக்கப் பண்ணுகிறேன்” ( ஈடு. 6 4 9)

உளுக்கா - உளுக்கார். உளுக்கார்தல் என்பது இன்றும் நாட்டுப்புற வழக்காம்.

உளுக்கார் - உட்கார். உட்கார்தல் = கீழ் அல்லது இருக்கையில் இருத்தல்.

எங்ஙனம் அமர்ந்திருப்பினும், நிற்கும் நிலையினும் உட்கார்ந் திருக்கும் இருப்பு உருவ அளவில் ஒடுங்கியிருத்தல் காண்க.

உட்கார் - உட்கார்ந்து (பி.வி.) உட்கார்த்துதல் = உட்கார வைத்தல்.