பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

13

‘ஏ’ என்னும் இரு வேர்ச்சொற்கள்

1. ‘(தன்மைப் பெயரடி)’
தன்மைப் பெயர்கள்
(முதல்நிலை)
எண்எழுவாய்வேற்றுமையடி
ஒருமைஏன்என்
பன்மைஏம்எம்
இரட்டைப் பன்மை(ஏங்கள்)எங்கள்

இவற்றுள், ‘ஏங்கள்’ என்பது ஏனையீரிடத்து இரட்டைப் பன்மைக் கொத்த வடிவேயன்றி, அவற்றைப்போல் உயர்வு குறித்ததன்று. அதுவும் அடியோடு வழக்கற்றது. ‘ஏன்’, ‘ஏம்’ இரண்டும் இன்று பெயராகவன்றித் தன்மை வினைமுற் றீறாகவே வழங்கி வருகின்றன.

எ - டு : வந்து + ஏன் = வந்தேன்

    வந்து + ஏம் = வந்தேம்

இவ் வீறுகள் பின்வருமாறு திரியும்

ஏ - என் - அன் - அல்.

எ - டு : வந்தென், வந்தனென், வருவன், வருவல்.

ஏம் - எம்.ம. ஏன்;க. என், ஏனு, ஏனெ, எ;தெ. னு, னி.

எ - டு : வந்தெம், வந்தனெம்.ம. ஓம்;க. எவு, ஏவு; எவெ;தெ. மு, மி.