பக்கம் எண் :

61

6

குல்4 (எரிதற் கருத்துவேர்)

எரிதற் கருத்தினின்று சுடுதல், ஒளிர்தல், சிவத்தல், காந்தல், உறைத்தல், நோதல், சினத்தல், விரைதல் முதலிய கருத்துகள் பிறக்கும்.

குமரிநாட்டு உலகவழக்கும் இலக்கிய வழக்கும் பெரும் பாலும் இறந்துபட்டதனால், பல இணைப்புச் சொற்களை இங்குக் காட்ட முடியவில்லை. எனினும், நடுநிலையொடு நோக்கும் நுண்மதியர்க்கு, இங்குக் காட்டப்பெறும் சொற்களே போதியனவாம்.

குல் - குலா - குலவு. குலவுதல் = விளங்குதல். “குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள்’’ (தேவா. 794:7).

குலவு - குலாவு. குலாவுதல் = விளங்குதல்.

குலப்பம் = செம்புமணல் - (W. ).

குல் - குர் - குரு. குருத்தல் = சினத்தல். (W.). குரு - வ. க்ருத் (dh).

குரு = 1. ஒளி. “குருமணித் தாலி’’ (தொல். சொல். 303, உரை). 2. சிந்துரம் (W.). வ. க்ரு (ghr).

குருவெறும்பு = செவ்வெறும்பு, முசிடு. (W.).

குரு - குருதி = 1. சிவப்பு. “குருதித் துகிலின் னுறையை’’ (சீவக. 926). 2. அரத்தம் (திவா.). 3. செவ்வாய் (திவா.).

. குருதி.

குருதிக் காந்தள் = செங்காந்தள் (சீவக. 1651, உரை).

குருதிக்கிழமை (வாரம்) = செவ்வாய்க்கிழமை.

“குருதி வாரந் தனக்குக் கொஞ்ச நாளிற் கிழியும்’’ (அறப். சத. 61)

குரு - குருந்து = மாணிக்க வகையுள் ஒன்று (W.).