பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

8. மூக்குள் நீர் கொள்ளுதல். நீர் கோத்தல், நீர்க்கோவை (மூக்குச்சளி)என்பன உலக வழக்கு. ம., க. கோ.

கோவை = 1. கோக்கை. “கோவையார் வடக்கொழுங் கவடு’’ (கம்பரா. அயோத். வரைக். 1). 2. கோத்த மணிமாலை (பிங்.). 3. வினையேற்பாடு. “கோத்தகோவை நன்றாயினும்’’ (பாரத. சூது. 64). 4. அகப்பொருட் கோவை. “சீரணங் காகியசிற்றம்பலக் கோவை செப்பிடினே’’ (தனிப்பாடல்).

ம., தெ. கோவ.

குழி - குறி. குறித்தல் = 1. கோடு கீறுதல். “புழுக் குறித்தது எழுத்தானாற் போல’’ (ஈடு, 2 4 3). 2. வரையறுத்தல் (பிங்.). 3. குழித்தெழுதுதல். 4. ஒன்றை யெழுதி வைத்தல். 5. எழுதி வைத்தாற்போல் மனத்திற் கொள்ளுதல். 6. எழுதியகுறியால் ஒன்றைத் தெரிவித்தல் அல்லது சுட்டுதல். 7. ஒன்றைச் சொல்லுதல். 8. எழுதியகுறியை எய்தற்கு இலக்காகக் கொள்ளுதல். 9. எதையேனும் அடைதலை அல்லது பெறுதலை இலக்காகக் கொள்ளுதல்.

கிளைக் கருத்துகள் (கொள் என்னும் வினை)

கொள் -ம., க. கொள், தெ. கொனு.

முகத்தல்

கொள்ளுதல் = முகத்தல். “குணகடல் கொண்டு குடகடன் முற்றி’’ (மதுரைக். 238).

கொள் - கோள் = முகில். “கோளொடு குளிர்மதி வந்து வீழ்ந்தென’’ (சீவக. 320).

கோள் - கோய் = 1. கள் முகக்குங் கலம். “ஓரிற் கோயிற்றேருமால்’’ (புறம். 300), 2. சாந்துச் செப்பு, “சாந்துக்கோய் புகிய செல்வ’’ (சீவக. 764). குல் - கொல் - கோல். கோலுதல் = முகத்தல்.

தன்னுட் கொள்ளுதல்

கொள்கலம் = பண்டம் இடுங்கலம். “இடும்பைக்கே கொள் கலங்கொல்லோ’’ (குறள். 1029).

“சிதரரிக் கண் கொண்ட நீர்’’        (நாலடி. 394)

இடுதல்

உட்கொள்ளுதல் = உண்ணல்.