பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

சுண்டு - சுண்டான் = சிறுபிள்ளைகள் தீக்கொளுத்தி விளையாடுங் குச்சு (சுண்டாங்கொள்ளி).

சுள் - சுண் - சுண்ணம் = 1. நீறு. 2. சுண்ணாம்பு. 3. நறுமணப் பொடி. “பலர்தொகு பிடித்த தாதுகு சுண்ணத்தர்’’ (மதுரைக். 399). 3. பொடி. “செம்பொற்சுண்ணம்’’ (பெருங். உஞ்சைக் 33 120). 4. பூந்தாது. “தாழைக் கொழுமட லவிழ்ந்த......... சுண்ணம்’’ (மணிமே. 4: 8).

சுண்ணம் - பிரா. சுண்ண, வ. சூர்ண.

சுண்ணம் - சுண்ணம்பு - சுண்ணாம்பு = 1. சுட்ட சுண்ணாம்புக் கல். 2. நீற்றின சுண்ணாம்பு. ‘‘விரைப்பாகு வெள்ளிலை சுண்ணாம்பி னொடு’’ (வாயுசங். கிரியா. 23). 3. அரைத்த சுண்ணாம்பு. ம. சுண்ணாம்பு. சுண்ணாம்புக்காரன் = சுண்ணாம்பு விற்குங்குலத்தான். சுண்ணம் - சுண்ணகம் = நறுமணப்பொடி.

சுண்ணகம் - வ. சூர்ணக (c).

சுண்ணம் - சுணம் = 1. சுண்ணப்பொடி. “புரிந்த பூவொடு பொற்சுணங் கழும’’ (பெருங். உஞ்சைக். 39: 46). 2. அழகுதேமல். “சுணநன்றணி முலையுண்ண’’ (திவ். பெரியாழ், 2:3:4).

சுண்ணித்தல் = நீற்றுதல் (சங். அக. ).

சுண் - சுணங்கு = 1. பூந்தாது. “பசுமலர்ச் சுணங்கின்’’ (ஐங். 76) 2. பூந்தாது படர்ந்தாற் போன்ற பசலை. 3. அழகுதேமல். “மின்னுறழ் சாயற் பொன்னுறழ் சுணங்கின்’’ (பெருங். மகத. 16:5).

சுள் - சுள்கு - சுட்கு - சுக்கு = காய்ந்த இஞ்சி. ஒ.நோ : வெள் - வெள்கு- வெட்கு.

ம. சுக்கு, . சுஷ்க.

சுக்குதல் = காய்தல், உணத்தல் (நாஞ்சில் வழக்கு). சுட்குதல் = வறளுதல்.

சுட்கு - சுட்கம் = 1. வறட்சி. 2. வறண்டது. 3. வறுமை. 4. கஞ்சத்தனம். 5. ஒருவகை நோய்.

ஒ.நோ : வெட்கு - வெட்கம்.

சுக்கு - சுக்கான் = 1. சுண்ணாம்புக்கல். “சுக்கான் கல்லாகிய பகையாலே’’ (பொருந. 44, உரை). 2. உருக்குச் செங்கல். சுக்கான் சுண்ணாம்பு, சுக்கான்பாறை என்பன வழக்குச் சொற்கள்.