பக்கம் எண் :

21

3

நுல்3 (ஒளிர்தற் கருத்துவேர்)

ஒளி நெருப்பின் பண்பாதலால், நெருப்பைக் குறிக்குஞ் சொற் களினின்றே ஒளிர்தல் (விளங்குதல்) கருத்துச் சொற்கள் பெரும்பாலுந் தோன்றும்.

எ-டு: தீ = நெருப்பு. தீவம் (- Skt. dipa) = விளக்கு. தீ (-Skt. dhi) = அறிவு (அகவொளி).

எரிதல் = வேதல், விளங்குதல். ஒளி = நெருப்பு, விளக்கு, அறிவு, புகழ்.

காய்தல் = எரிதல், விளங்குதல்.

தழலுதல் = எரிதல், விளங்குதல். தகுந்தகுமெனல் = எரிதல், ஒளிவீசுதல். தகதகவெனல் = விளங்குதல், திகழ்தல் = ஒளிர்தல்.

பொறி = அனல்துகள், ஒளி.

முளிதல் = எரிதல். மிளிர்தல் = ஒளிர்தல்.

நுல் - நெல் - நெலி - ஞெலி = உரசித் தீப்பற்றும் மூங்கில். நெல் - நெரு - நெருப்பு = உரசிப் பற்றும் தீ.

நெல் - நில் - நில. நிலத்தல் = ஒளிவீசுதல்.

நில - நிலத்தி = மின்மினி (சூடா.).

நில = நிலா. “நிலவிரி கானல்”

நிலத்தி - நித்தி - நித்தில் = மின்மினி (நாமதீப. 253).

நித்தில் - நித்திலம் = ஒளிரும் முத்து.

“உரைபெறு நித்திலத்து மாலை”    (சிலப். 3 112 - 3)

நித்திலக் கோவை (முத்துமாலை) என்பது அகநானூற்றின் மூன்றாம் பகுதிப் பெயர்.