பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

3. சோம்புதல். (திவா.) 4. அஞ்சுதல் (திவா.). 5. குலைதல் (பிங்.). 6. அலைதல் (பிங்.).

நொள்கெனல் - அச்சக் குறிப்பு.

நொள் - நெள் - ஞெள். ஞெள்ளல் = சோர்வு.

நொள் - நொள. நொளநொளத்தல் = 1. குழைதல். 2. வழுவழுப்பாதல்.

நொள் - நொளு. நொளுநொளுத்தல் = குழைதல்.

நுள் - நள். நளுநளுத்தல் = குழைதல்.

நொள் - நொளில் = சேறு (பிங்.).

ஒ.நோ.: தொள் - தொள்ளி = சேறு. தொள்ளி - தொளி = சேறு.

நொளில் - நொறில் = 1. நுடக்கம். “நொறிலியற் புரவி யுதியர் கோமான்” (தொல். சொல். 396, உரை). 2. ஒடுக்கம் (பிங்.). 3. சேறு. “செருநில நொறிற்செந் நீரினுள்” (சூளா. அரசி. 274).

நொளு - நொளுப்பு = வேலை கழப்புகை.

நொள் - நொடு - நொடி. நொடித்தல் = 1. கட்டுக்குலைதல். சக்கரம் நொடிக்கும் (உ.வ.). 2. வணிகத்தில் இழப்படைதல். 3. செல்வநிலை தாழ்ந்து வறுமையடைதல்.

நொடு - நொது. நொதுத்தல் = 1. தளர்தல். 2. அழிதல். நொது - நொந்து. நொந்துதல் = அழிதல். “நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்” (தேவா. 1218). 3. நொந்து - நந்து. நந்துதல் = 1. கெடுதல். “நாடற்கரிய நலத்தை நந்தாத் தேனை” (திருவாச. 9 15). 2. மறைதல். “இடையுறு திருவென வந்து நந்தினான்” (கம்பரா. உண்டாட். 67). 3. சாதல். “திருமைந்தன் நந்த றீர்ந்தது மாயுளைப் பெற்றதும்” (பிரமோத். 21 61). 4. அவிதல்.

நந்து = 1. மெல்லிய சதையுள்ள நீருயிரி. 2. அது இருக்கும் சங்கு.

“நீர்வாழ் சாதியுள் நந்தும் நாகே”    (தொல். மரபு. 64).

நந்து - நத்து - நத்தை = 1. மெல்லிய சதையுள்ள ஊமைச்சி. 2. அது இருக்கும் கூடு.

நத்து - சங்கு. “தத்தொடு நள்ளி” (பரிபா. 10) நொது - நொதி = சேறு.

நந்து - நத்தம் = 1. சங்கு (சீவக. 547, உரை). 2. ஊமைச்சி. நெள் - நெழு - நெகு. நெகுதல் = 1. கழலுதல். “எனவளை நெகவிருந்