பக்கம் எண் :

31

நைய நறுங்கத் தட்டுதல் - மிக நொறுங்கச் சதைத்தல்.

ஒ.நோ.: நெகவரைத்தல் = மாவாக அரைத்தல்.

நைச்சாந்து = மைப்பதச் சன்னக்காரை. நையப்புடைத்தல் = உடம்பு தளர அடித்தல். நைபவர் = வறியவர், நிலைமை தாழ்ந்தவர். “நைபவ ரெனினும் நொய்ய வுரையேல்” (கொன்றை. 56).

நைவு = 1. மிகப் பழுத்தது. 2. வாடினது. நைவருதல் = இரங்குதல் (புறம். 146).

நை - நயி - நசி. ஒ.நோ.: மொய் - மொயி - மொசி. நசிதல் = 1. நசுங்குதல். 2. சுருங்குதல். 3. நிலைமை கெடுதல். 4. அழிதல்.

நசி - . நச் (nas).

நசித்தல் = (செ. கு. வி.). 1. நிலைமை தாழ்தல். அந்தக் குடும்பம் நசிந்துகொண்டு வருகிறது (உ.வ.). 2. அழிதல். “நசியா வுலகிற் பாவமும் நசிக்கும்” (காஞ்சிப்பு. மணிக. 61). 3. சாதல். “நசித்தவரை யெழுப்பியருள்” (அருட்பா. 6, அருள்விளக்க. 4).

(செ. குன்றா வி.). 1. அரைத்தல். 2. அழித்தல். ம. நசிக்க. நசியல் = 1. நெரிந்தது. 2. துவள்வது. நசியலன் = கழப்புணி, நழுவி.

நசிவு = 1. நெரிவு, 2. பழி. 3. கேடு. நசிவு காணுதல் = நைந்து சேதப்படுதல்.

நசி - நசுங்கு. நசுங்குதல் = 1. நைந்து போதல். 2. பழம் நசுங்கி விட்டது (உ.வ.). 3. கசங்குதல். 4. நிலைகுலைதல்.

நசுங்கச் சப்பி = பிசினாறி.

நசுங்கு - நசுக்கு. நசுக்குதல் = 1. நசுங்கச் செய்தல். 2. சிரங்குக் கொப்புளத்தைத் தேய்த்துப் பிதுக்குதல். 3. மூட்டைப் பூச்சி பேன் முதலியவற்றை அழுத்தி அல்லது குத்திக் கொல்லுதல். 4. யானை உயிரிகளை மிதித்துக் கொல்லுதல். 5. எதிரிகளை அடக்கி யொடுக்குதல். 6. குடற்காற்றை அடக்கி வெளிவிடுதல்.

. நசிக்கு.

நசுங்கல் = 1. நைந்த காயம். 2. மெலிந்தது. 3. சிறியது.

நசுங்கலான் = 1. உறுதியற்றவன். 2. சிறியது. நசுங்கலாண்டி = உறுதியற்றவன்.

நசுக்கு = 1. நெரிவு. 2. சிறியது. தெ. நலுசு.

நசுக்குணி = 1. சிறியது. 2. கூழையன். நசுக்குணி - நசுகுணி.