நடன் - நடி = நடனப்பெண் (திவா.). நடி - வ. நடீ (நட்டீ). நடம் - நட்டம் = நடனம். “நட்டம் பயின்றாடு நாதனே” (திருவாச. 1 89). நட்டம் - வ. நாட்ய, ந்ருத்த; பிரா. நட்ட. நட்டம் - நட்டவம் = நடம்பயிற்றுந் தொழில். “நட்டவஞ் செய்ய நட்டவம் ஒன்றுக்கு” (S.I.I.II, 274). நட்டவம் - நட்டுவம் = நடம்பயிற்றுந் தொழில். தெ. நட்டுவ. நட்டுவம் - நட்டுவன் = நடம் பயிற்றுவோன், ஆட்டு விப்போன். “உயிரையெல்லா மாட்டுமொரு நட்டுவனெம் மண்ணல்” (திருவாதபு. புத்தரை. 75). ம. நட்டுவன், தெ. நட்டுவுடு, க. நட்டுவ. நட்டுவம் - நட்டு = 1. நடம். 2. நடன். 3. நட்டுவன். இனி, நட்டம் - நட்டு - நட்டுவம் என்றுமாம். ஒ.நோ.: முட்டு - முட்டுவம் - முட்டுவன். நடி + அனம் - நடனம் = 1. கவின்கூத்து. 2. குதிரை நடை. “பதினெட்டு நடனத்தொழில் பயிற்றி” (கொண்டல்விடு. 176). 3. பாசாங்கு. 4. மாமாலம் (இந்திரசாலம்). “நன்றுநன்றுநீ நம்முனர்க் காட்டிய நடனம்” (கந்தபு. அவைபுகு. 87). நடனம் - வ. (நட்டன) நடன. நடனம் - நடனன் = கவின்கூத்தன். நடனன் - நடனி = கவின் கூத்தி. “நடித்தெதிர் நடந்த தன்றே நடனியர் தம்மின் மன்னோ” (இரகு. ஆற்று. 20). நடி - அகம் = நாடகம் = 1. நடம் (பிங்.). 2. கதை தழுவி வருங் கூத்து. “நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்” (தொல். அகத். 53) நாடகம் - வ. நாடக (நாட்டக). நளி - நளினம் = 1. நயச்சொல். “பயிலு மானவர் பேச னளினமே” (சேதுபு. திருநா. 115). 2. நகையாட்டு. 3. முகமன். |