பக்கம் எண் :

73

சென்னைப் ப.க.த. அகரமுதலியில், இச் சொல் சமற் கிருதத்தினின்று பிராகிருத வழியாகத் தமிழுக்கு வந்ததென்று தலைகீழாகக் குறிக்கப்பட்டுள்ளது.

பல்லக்கைக் குறிக்கும் பர்யங்க்க என்னும் வடசொல், பல்யங்க்க என்னும் வடிவும் கொள்ளும். அது தென்சொல் வடிவிற்கு நெருக்கமான தென்பது தெளிவு.

பர்யங்க்க என்னும் வடசொற்கு மூல விளக்கம், மானியர் வில்லியம்சு சமற்கிருத ஆங்கில அகரமுதலியிற் பின்வருமாறு குறிக்கப்பட்டுள்ளது.

‘paryanc........... to turn about or round, revolve, R. V. X, 119, 5.

pary-anka............. a bed, couch, sofa, litter, palanquin, Kaush Up............’’

புரிதல் = வளைதல். எ-டு: வலம்புரி, இடம்புரி. புரி - பரி. பரிதி = வட்டமான கதிரவன். பரிசல் = வட்டமான நீர்கடத்துக் கூடை. பரிசை = வட்டமான கேடகம்.

அங்குதல் = வளைதல், சாய்தல், கோணுதல், வாட்டஞ் சாட்டமாதல்.

வணங்கு - வாங்கு - வங்கு - அங்கு. வங்கு - வங்கி = நெளிவளையல், வளைந்த கத்தி (பிச்சுவா). அங்கு - அங்கணம் = வாட்டஞ்சாட்டமான சாய்கடை.

“அங்கணத்து ளுக்க வமிழ்தற்றால்”     (குறள். 720)

“ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்”    (நாலடி. 175)

பரி - வ. பரி, round, around, about, round about.

அங்கு - வ. அஞ்ச், to bend, curve, incline, curl.

ஒ.நோ.: பொங்கு - பொஞ்சு.

பர்யங்க்க என்னும் வடசொற்குக் கூறப்படும் பொருட் கரணியம், ஒருமருங்கு தமிழுக்கும் பொருந்தும்.

பல்லங்கு - பல்லக்கு - பல்லாக்கு.

பல்லங்கு = பலவளைவு. பல்லக்கின்மேல் மூங்கில் மூவளை வினதா யிருத்தல் காண்க.

“வருத்தவளை வேய்அரசர் மாமுடியின் மேலாம்” (நீதிவெண்பா, 7)

பல்லக்கு - பல்லாக்கு.