ஒ.நோ.: கண்டு - கண்டம், துண்டு - துண்டம். தெ. பிண்டலி, வ. பிண்ட, க. பெண்ட்டெ, ஹெண்ட்டெ, ஹெண்டெ. பிண்டக்கரு = உறுப்பற்ற சதைத்திரளான கரு (embryo, foetus). பிண்டக் காப்பு = சோறு. பிண்டக் காப்புக்குத் தாளம் போடுகிறான் (உ.வ.). பிண்டக் கருமம் = தென்புலத்தார்க்குப் பிண்டம் படைக்கும் சடங்கு. பிண்டகன் = பிண்டம் படைப்போன். பிண்ட நூற்பா = அதிகாரப் பொருளை அல்லது நூற்பிரிவுப் பொருளைத் தொகுத்துக் கூறும் நூற்பா. பிண்டதானம் = பிண்டப் படைப்பு. பிண்டப் பொருள் = கருத்து (W.). பிண்டப் பொழிப்பு = பிண்டவுரை (சி.போ. பா.1, ப. 26, சுவாமிநா). பிண்டபாகம் = ஐயம் (பிச்சை) (அக. நி.). பிண்டம் பிடித்தல் = (செ. குன்றாவி.). 1. உண்டை திரட்டுதல். 2. உருச்சிதைத்து உருண்டை யாக்குதல். (செ. கு. வி.). கரு உண்டாதல் (உ.வ.). பிண்டம் விழுதல் = காய் விழுதல் (abortion). பிண்டவுரை = பொழிப்புரை (W.). கரு, கருமம், தானம், பாகம் என்பன வடமொழிக்கண் சென்று வழங்கும் தென்சொற்களே. என் *வடமொழி வரலாறு என்னும் நூலைப் பார்க்க. பிண்டு - பிண்டி. ஒ.நோ.: கண்டு - கண்டி, துண்டு - துண்டி. பிண்டி = 1. வடிவம் (சிலப். 3 26, உரை). 2. கூட்டம் (W.). 3. ஏழாம் நாள் (புனர்பூசம்) (சூடா.). 4. இணையா வினைக்கை வகை (சிலப். 3 18, உரை). * Sanskrit Language VIII, Non-Aryan Influence in Sanskrit. |