பக்கம் எண் :

127

பர-பரல் = பருக்கைக்கல். பர்-பரு-பருக்கை = குத்தும் கரட்டுக்கல்.

முர்-முர-முரமுர-முரமுரப்பு = சுரசுரப்பு.

முர-முரம்ப = சரள்.

முர-முரண்-முரடு.

சுரசுரப்பானதைக் கரடுமுரடானதென்று கூறுதல் காண்க.

vii. குத்தும் பொருள்களின் கூர்மை

உள்-உளி-உசி = கூர்மை. உசி-ஊசி = கூர்மை.

உள்-அள் = கூர்மை.

அள்-(அய்)-அயில் = கூர்மை,

குள்-குர்-கூர். (குர்-குரு-குருக்கு-ஒருவகை முட்செடி.)

குள்-கள்-கரு-கருக்கு = கூர்மை.

கள்-கடு-கடி = கூர்மை.

குனை-கொனை = கூர்.

சுள்-சுணை=கூர்மை.

துள்-துய் = கூர்மை.

நுல்-நுன்-நுனை = கூர்மை.

நுள்-நுட்பு-நுட்பம் = கூர்மை.

முள்-முளை = கூர்மை.

“முள்ளுறழ் முளையெயிற்று”                             (கலித். 4)

முன்-முனை = கூர்மை.

முள்-(மள்)-வள் = கூர்மை.

வள்-(வய்)-வை = கூர்மை.

வள்-வடி = கூர்மை.

முள்-வெள் = கூர்மை.

viii. குத்துவதால் உண்டாகும் புள்ளி

ஒத்து = ஒற்று = புள்ளி, புள்ளியுள்ள மெய்யெழுத்து.

குத்து = புள்ளி.