பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

சுள் - சுள்ளாப்பு = கடுவெயில்.

சுள் - சுள்ளை - சூளை = செங்கல் சுடுமிடம்.

சுள் - (சுட்கு) - (சுட்கான்) - சுக்கான் = அளவிறந்து சுடப்பட்ட செங்கல்.

சுள் - சுர் - சுரம் = சுடும்பாலை. சுர் - சுரன் - சூரன் = கதிரவன்.

சுர் - சுறு - சுறுக்கு (சுடுதற் குறிப்பு).

சுறு - சுறீர் (சு.கு.).

சுள் - சுடு - சுடல் - சுடலை. சுடு - சூடு.

சுடு - சுடர் - சுடரோன்.

துள் - தெள் - தெறு. தெறுதல் = சுடுதல்.

“நீங்கிற் றெறூஉம்”                                       (குறள். 1104)

ii. எரிதல்

சுடுவது நெருப்பு. நெருப்பின் இயல்பு எரிதல்.

உல் - உரு. உருத்தல் = அழலுதல். உரு - உருப்பு - உருப்பம் = வெப்பம்.

உரு - உருமம் = வெப்பம், நண்பகல். உருமகாலம் = கோடைக் காலம்.

உரு - உரும் - உருமி. உருமித்தல் = புழுங்குதல்.

உல் - எல் - எரி.

உள் - உண் - உண்ணம் = வெப்பம்.

குள் - கொளு - கொளுந்து - கொளுத்து ( பி. வி.). கொளுந்துதல் = எரிதல்.

குள் - (கள்) - காள் - காய். காய்தல் = எரிதல். காய் - காய்ச்சல். காய் - (காய்ந்து) - காந்து.

ஒ.நோ: வேய்ந்து - வேந்து.

காள் - காளம் - காளவாய் = சுண்ணாம்புக்கல் சுடுமிடம்.

(கள்) = கண் - கண - கணப்பு = நெருப்பு.

(கண்) - கணை = உடம்பிலுள்ள சூடு.

(கண்) - கண்டு = அக்கி.

கும்புதல் = எரிதல்.