பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

“தெள்ளுங் கழலுக்கே”                                     (திருவாச. 10:19)

தெள் - தெளி. தெளிதல் = விளங்குதல், நன்றாய்த் தெரிதல்.

தெளி - தெரி. தெரிதல் = விளக்கமாதல், தோன்றுதல். தெளி - தெசி.

முள் - விள் = விளங்கு. விளங்குதல் = ஒளிர்தல், தெளிவாகத் தெரிதல்.

ix. அறிதல்

தெரியும் பொருள் அறியப்படும்.

தெள்ளிமை = அறிவுநுட்பம். தெள்ளியர் = தெளிந்த அறிவினர்.

தெளிதல் = அறிதல்.

தெளி - தெரி. தெரிதல் = அறிதல்.

தெள் - தெருள். தெருள்தல் = அறிதல், உணர்தல்.

தெரி - தேர். தேர்தல் = அறிதல்.

x. ஆராய்தல்

தெரியாத பொருளைப்பற்றிய அறிவு ஆராய்ச்சிவழிப் படுவதாம்.

தெள்ளுதல் = ஆராய்தல்.

தெள் - தெளி. தெளிதல் = ஆராய்தல்.

தெளி - தெரி. தெரிதல் = ஆராய்தல், தெரிந்தெடுத்தல்.

தெரி - தேர். தேர்தல் = ஆராய்தல்.

xi. தெளிதல்

ஆராய்ச்சியால் ஐயம் நீங்கித் தெளிவு பிறக்கும். அதன்பின் தெளியப்பட்டதன்மீது நம்பிக்கையுண்டாம். அதனால் ஒரு வினை முயற்சிக்கு உறுதியான தீர்மானஞ் செய்யப்பெறும்.

துணிதல் = தெளிவாதல், உறுதியாக முடிவு செய்தல். துணிவு = உறுதி, சூழ்ச்சித் தெளிவு.

“துன்னல் போகிய துணிவினோன”                        (புறம். 23)

துணிச்சல் = கடுமனத்திடம்.

துல் - தெல் - தென் - தென்பு = தெளிவு. தென்பு - தெம்பு.

தெள்ளுதல் = தெளிவாதல். தெள் - தெளி. தெளிதல் = ஐயநீங்குதல், நம்புதல்.