பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

வெள்ளிலை = இலை தவிர வேறு பூ காய் ஒன்றுமில்லாத கொடியிலை, அல்லது உணவின்றியும் வழங்கப்படும் இலை.

வெண்பாட்டம் = மாராயமில்லாது வெறுமையான பாட்டம்.

வெண்ணிலைக் கடன் = ஈடில்லாது வெறுமையாகக் கொடுக்கப்படும் கடன்.

வெள் - வெறு - வெறுமை = தனிமை, ஒன்றுமின்மை. வெறு இலை வெற்றிலை (வெள்ளிலை.).

வெறுஞ்சோறு = கறிவகையில்லாத் தனிச் சோறு.

மாட்டுத்தாம்பணியில் (தாவணியில்) எங்குப் பார்த்தாலும் வெறும் மாடாயிருக்கும்’ என்பது போன்ற வழக்கைக் காண்க.

வெறுவாய் = ஒன்றுமில்லாத வாய்.

வெறு - வெறுமம் - வெறுமன். வெறுமனே போய்விட்டான் என்பது, ஒன்றுஞ் சொல்லாது அல்லது செய்யாது போய்விட்டான் என்று பொருள்படுவதை நோக்குக.

வெறு - வெற்று. வெற்றிடம் = ஒன்றுமில்லாத இடம். வெற்று வண்டி = வெறு வண்டி. வெற்றாள் = தனியாள்.

வெறு - வெறி. வெறித்தல் = முகிலும் மழையுமின்றி வானம் வெறுமையாதல்.

வெறி - வெறித்து - வெறிச்சு = வெறுமை.

ஆளிருந்து போய்விட்ட வெற்றிடத்தைக் கண்டு, வெறிச் சென்றிருக்கிறது என்பர்.

xix. வெறுமை

பொருளில்லா வெறுமையே வறுமை.

வெள் - (வெண்கு) - வெங்கு - வெங்கன் = ஒன்றுமில்லாதவன்.

வெள் - வெறு. வெறும்பயல் = ஒன்றுமில்லாத பயல்.

வெறு - வெற்று. வெற்றுக்கட்டை = ஒன்றுமில்லாதவன்.

வெற்றெனத் தொடுத்தல் = (சிறந்த) பொருளின்றிச் சொல்லை யடுக்குதல்.

வெறு - வறு - வறுமை = பொருளின்மை.