பக்கம் எண் :

67

vi. சகர வெதுகை

(குசு)-கிசு-கிசுக்கு(வி. கு.).

புசு-புசுக்கு-பொசுக்கு (வி. கு.).

புசு-பொசு-பொசுபொசு.

(முசு)-விசு-விசுவிசு (வி. கு.).

விசு-விசுக்கு (வி. கு.).

பொசுக்கென்று போய்விட்டது, விசுவிசுவென்று பிடித்தெரிகிறது, விசுக்குவிசுக்கென்று நடந்து போகிறான், என்பன வழக்கு.

விசு-விசை = வேகம்.

(7) (நடுக்கம்) அச்சம்

உடலும் நெஞ்சாங்குலையும் விரைந்து அசைவது அச்சத்தைக் குறிக்குமாதலால், விரைவுக் கருத்தில் அச்சக் கருத்துப் பிறந்தது.

துள்-துண். துண்ணெனல் = திடுக்கிடுதல், அஞ்சுதல்.

துண்-துணுக்கு. துணுக்கிடுதல் = திடுக்கிடுதல்.

துணுக்கு-துணக்கம் = நடுக்கம், அச்சம்.

துண்-திண்-திடு-திடுக்கு.

நுடு-நடு-நடுங்கு-நடுக்கு-நடுக்கம்.

விது-விதிர்-விதிர்ப்பு = நடுக்கம். விதிர்விதிர்ப்பு = நடுநடுக்கம். விது-விதுக்கு. விதுக்கு விதுக்கெனல்=அச்சத்தால் நெஞ்சம் படக்குப் படக்கென்று அடித்துக் கொள்ளுதல். இங்ஙனம் அடித்துக்கொள்ளு தலை வெருக்கு வெருக்கென்றிருக்கின்றது என்பர். விதுக்கு - விருக்கு - வெருக்கு-வெருவு-வெரு=அச்சம். வெருவுதல்= அஞ்சுதல். வெரு-வெருள்-வெருளி-அச்சுறுத்தும் புல்லுரு. வெருள்-விரள்-மிரள். விரள் - விரட்டு. விரட்டுதல்=அச்சுறுத்துதல், அச்சுறுத்தி வேகமாக ஓட்டுதல்.

(8) வீசுதல்

ஒருவன் வேகமாய் நடக்கும்போது, அவன் கை வேகமாய் வீசுவதாலும், அங்ஙனம் வீசும்போது அது நீளுவதாலும், வேகமாய் நடப்பதைக் குறிக்கும் விசு என்னும் சொல், வேகமாய் ஒன்றை வீசுவதையும் நீட்சியையுங் குறிக்கும் சொற்களைப் பிறப்பித்துள்ளது.