பக்கம் எண் :

75

புரை = உயர்வு. புரையோர் = உயர்ந்தோர்.

“புரையுயர் வாகும்”                                          (தொல். உரி. 4)

புள் = (மேலெழும்) பறவை.

புள் - (பள்) - (பண்) - பணை = பரண், உயரம், மூங்கில் அரசு முதலிய உயர்ந்த மரம்.

பொக்கம் = உயரம், மிகுதி.

பொகுட்டு = மலை.

பொங்கம் = மிகுதி, பொங்கர் = மலை.

பொருப்பு = மலை.

பொற்றை - பொத்தை - பொச்சை = மலை.

பொறை = மலை. பொறையன் = மலைநாடன், சேரன்.

போற்றுதல் = புகழ்தல், வளர்த்தல், காத்தல்.

போற்றி = இறைவனை ஏத்துபவன், பூசாரி.

முகடு = உச்சி, மேலிடம், கூரை. முகடு - மோடு - மேடு - மேடை. மேட்டிமை =செருக்கு.

முகட்டுப்பூச்சி - மூட்டுப்பூச்சி - மூட்டைப்பூச்சி - மூட்டை.

(5) உச்சி (தலை)

உச்சமான உறுப்பு உச்சியாகும்.

உளை = தலை, தலைமயிர்.

உக்கம் = தலை. உவ்வீ = தலை.

உச்சி = மேலிடம், தலை.

சுட்டி = மயிர்முடி.

சுடிகை = தலையுச்சி, மயிர்முடி, சூட்டு.

சூளி = உச்சிக்கொண்டை. சூளி - சூழி = உச்சி, உச்சிக் கொண்டை, மேலிடம். சூழியம் = உச்சிக்கொண்டை, மேலிடம்.

சூழியல் = சுவரின் எடுத்துக்கட்டி (cornice).

சூளிகை = நிலாமுற்றம்.

சூளை - சூடை = தலை, குடுமி.

சூட்டு = உச்சிக்கொண்டை, மதிலுச்சியிலுள்ள ஏவறை.

சூடம் = தலையுச்சி. சூடாலம் = தலை.

சூடு = குடுமி, உச்சிக்கொண்டை.