பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

(9) உயர்ச்சி குறிக்கும் எகர முதற் சொற்கள்

உ-இ-எ-ஏ. உ-எ-ஏ

எஃகுதல் - ஏறுதல்.

எக்குதல் = வயிற்றை நிமிர்த்துதல். எக்கர் = மணல்மேடு.

எகிர்தல் = எழுதல், குதித்தல்.

எட்டுதல் = உயர்ந்து அல்லது நீண்டு தொடுதல். எட்டம் = உயரம், தூரம்.

எட்டன் = உயர்ந்தோன்.

எட்டர் = அரசனுக்கு நாழிகைக் கணக்குக் கூறும் ஏத்தாளர்.

எட்டி = உயர்ந்தவன், சிறந்தவன், பண்டைத் தமிழரசர் வணிகர் தலைவனுக்கு வழங்கிய சிறப்புப் பட்டம்.

எட்டி - செட்டி. செட்டி - செட்டு = செட்டியின் தன்மை. எட்டி - ஏட்டி. செட்டி - சேட்டி.

எடுத்தல் = தூக்குதல், நிறுத்தல். எடுப்பு = உயர்வு.

எடை = நிறை.

எண்ணுதல் = மேன்மேற் கருதுதல், மேன்மேற் கணக்கிடுதல்.

எண் = மேன்மேற் செல்லும் தொகை.

எம்புதல் = எழுதல், குதித்தல்.

எவ்வுதல் =எழுதல், குதித்தல்.

எழுதல் = உயர்தல், கிளர்தல். எழு - எழுவு.

எழு - எழும்பு - எழுப்பு, எழு - எழில் = உயர்ச்சி, அழகு. எழால் = எழுகை, இசையெழுகை.

ஏ = உயர்ச்சி, பெருமை.

“ஏபெற் றாகும்”                                          (தொல். உரி. 7)

ஏ = மேனோக்குகை.

“கார்நினைத் தேத்தரு மயிற்குழாம்”                   (சீவக. 87)

ஏக்கழுத்தம் = கழுத்து நிமிர்ப்பு, தலையெடுப்பு.

ஏடு = மேன்மை.

“ஏடுடைய மேலுலகோடு”                               (தேவா. 539:2)