பக்கம் எண் :

101

x. பிரிதல்

பிளந்த பொருள் வேறாகப் பிரியும்.

புல் - பில் (வில்) - விலகு - விலக்கு - விலக்கம்.

விலகு - விலங்கு. விலங்குதல் = விலகுதல்.

புள் - புய், புய்த்தல் = பிரித்தல், பிடுங்குதல். புய் - பிய்.

பிய் - (பெய்) - பெயர். பெயர்தல் = பிரிதல், விலகுதல்.

பெயர் - பேர்.

புள் - பிள் - பிரி = பிரிவு, பிரிவினை.

பிள் - பிடு - பிடுங்கு. பிடுங்குதல் = பெயர்த்தல், பறித்தல்.

பிடு - (பிது) - பிதுங்கு - பிதுக்கு - பிதுக்கம்.

பிதுங்குதல் = பெயர்தல், பெயர்ந்து வெளிவருதல்.

(பிது) - பிதிர். பிதிர்தல் = பெயர்தல், பிதுங்குதல்.

பிள் - விள். விள்ளுதல் = விலகுதல்.

விள் - விடு - வீடு = விடுதல், நீங்குதல், செலவு, விட்டிருக்கும் இடம் (இல்லம்), பற்றுவிடுகை, பேரின்ப நிலையம்.

விடு - விடுதி. விடு - விடுதலை.

விடுதல் = பிரிதல், நீங்குதல். விட்டிசைத்தல் = பிரிந்தொலித்தல்.

xi. விடுத்தல்

விடுத்தலாவது சிக்கலான பொருளை விடுவித்தல்.

புள் - பிள் - பிய்(பியி) - பிசி = பிய்ப்பதுபோல் விடுக்கும் விடுகதை.

பிள் - பிடு - பிது - பிதிர் = விடுகதை. பிதிர் - புதிர்.

பிள் - விள். விள்ளுதல் = பிதிர் விடுத்தல். விள் - விடு  - விடுத்தல் = பிட்டுச் செல்லுதுல், விடுவித்தல். விடு - விடை = பிதிர்போன்ற அறியா வினாவை விடுத்தல்போற் கூறும் மறுமொழி.

xii. சேய் பிரிதல்

பிள் - பிற - பிறப்பு. பிற - பிறவி. பிற - பிறந்தை = பிறவி,இனம் (genus.)

தாயும் பிள்ளையும் வேறுவேறு பிரிந்துவிடவேண்டும் என்று பேறு காலத்திற் பெண்டிராற் கூறப்படுதல் காண்க. தாய் வயிற்றினின்று சேய் பிரிதலே பிறத்தலாம்.