பக்கம் எண் :

11

(உள்) - அள் = அளவு. அளவுதல் = கலத்தல். அளவு - அளாவு. அள் - அளை. அளைதல் = கலத்தல்.

உறுதல் = பொருந்துதல்.

உள் - (இள்) - இழை. இழைதல் = நெருங்கிப் பழகுதல்.

குலவுதல் = கூடுதல். கூடிக்குலாவுதல் என்னும் வழக்கை நோக்குக. குல - கல.

கூடுதல் = கலத்தல்.

குள் - கொள். கொள்ளுதல் = பொருந்துதல்.

சும் - (சுவ்) - சுவள் - சுவண்டு = பொருத்தம்.

“தூமதியஞ் சூடுவது சுவண்டே.”                                  (தேவா. 677:4.)

துன்னுதல் = பொருந்துதல்.

பூசுதல் = இயைதல்.

புல் - பொல் - பொரு = பொருந் - பொருந்து. பொரு முகவெழினி பொருங்கதவு முதலிய தொடர்களை நோக்குக.

முல் - மல் = மன். மன்னுதல் = பொருந்துதல். முள் - (முளவு) - முழவு. முள் - (முய்) - முய - முயங்கு - மயங்கு.

முழவுதல் = நெருங்கிப் பழகுதல். முழவு - முழாவு.

முளவு - விளவு - விளாவு. விளவுதல் = கலத்தல்.

ii. விரும்புதல்

நெருங்கிப் பயின்றவரும் உள்ளத்திற் கலந்தவரும் ஒருவரை யொருவர் விரும்புவர்.

உவத்தல் = பொருந்துதல், விரும்புதல், மகிழ்தல்.

குலவுதல் = கூடுதல், மகிழ்தல். குலவு - குலாவு.

(நுள்) - நள் - (நய்) - நய. நள்ளுதல் = பொருந்துதல். நயத்தல் = விரும்புதல், மகிழ்தல். முகத்தல் = (கலத்தல்) விரும்புதல்.

புள் - பிள் - விள். விள்ளுதல் = கலத்தல், விரும்புதல். இவ் வினை இன்று வழக்கற்றது. விள் - விளரி = வேட்கை.

விள் - விளை = விருப்பம். விளையாடுதல் = விரும்பியாடுதல்.