பக்கம் எண் :

117

புள் - புட்டி - புட்டில்.

புள் - பொள் - பொய் - (பய்) - பை.

முள் - முட்டி.

iv. பதர் (உள்ளீடற்றது)

துளையுள்ளது உள்ளீடற்றதாம். ஒரு செய்தியின் உண்மை அதற்கு உள்ளீடு போன்றிருப்பதால், பொய்யானது உள்ளீடற்றதாகக் கருதப்படும்.

குள் - கூள் - கூண்டு - கூடு = பதர்.

சுள் - சொள் - சொண்டு = பதர்மிளகாய். சொள் - சொட்டை - சொத்தை - சூத்தை = பதரான காய்கனி.

பொள் - பொழு - (பொகு) - பொக்கு = பதர், பொய்.

பொக்கு - பொக்கை = பல்லில்லா வாய்.

பொள் - பொய் = பதர், மெய்யல்லாதது.

v. குற்றம்

துளையுள்ள சில பொருள்கள் குற்றமுள்ளனவாகக் கருதப்படுவதால், துளைப்பெயர் குற்றத்தைக் குறிக்கும்.

உள் - ஒள் - (ஒட்டை) - ஓட்டை = குற்றம்.

சுள் - (சொள்) - சொட்டு - சொட்டை = குற்றம்.

நுள் - (நொள்) - நொட்டை = குற்றம்.

புள் - (புர) - புரை = குற்றம்.

vi. உள்ளிடம்

உள் = உள்ளம் - உளம்

உள் - அள் - (அழு) - (அகு) - அகம் - அகம்பு = உள் மனம்.

அகம் = உள், உள்ளிடம், மனம், வீடு, உள்நாடாகிய மருதம், அகப்பொருள்.

“ஆலைக் கரும்பி னகநா டணைந்தான்”                              (சீவக. 1613)

“ஆடுகளங் கடுக்கு மகநாட் டையே”                                  (புறம். 28)

அகம் - அகரம் = மருதநிலத்தூர்.