பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

உகு - உகம் = அழிவு, கேடு, ஊழி.

உள் - ஊள் - ஊளை = கெட்ட நெய்.

ஊள் - ஊழ். ஊழ்த்தல் = பதனழிதல், கெடுதல்.

ஊழ் - ஊழல் = கேடுபாடு, கெட்டது.

ஊழ் - ஊழி = கேடு, அழிவு ஓரழிவிற்கும் இன்னோரழிவிற்கும் இடைப்பட்ட காலம்.

ஊழ் - ஊசு. ஊசுதல் = உணவு கெடுதல்.

ஊழ்முட்டை - ஊமுட்டை = கெட்ட முட்டை.

குல் - குலை. குலைதல் = கெடுதல்.

குள் - குளறு - குழறு. குழறுதல் = நாத்தளர்தல்.

துல் - தொல் - தொலை. தொலைதல் = தளர்தல், கெடுதல்.

துள் - தள்  - தளர்.

நுள் - நொள் - நொள - நொச. நொசநொசத்தல் = சோறு கெடுதல்.

நொள் - நொ. நொந்துபோதல் = உணவு கெடுதல்.

vii. நொய்யதாதல்

குலைந்த பொருள் நொய்யதாகும். நொய்ம்மை என்பது வலியின்மை, கனமின்மை, சிறுமை முதலியவற்றைத் தழுவும்.

உல் - (இல்) - இலவு = நொய்ய பஞ்சு. இலவு - இலவம். இலவு - இலகு.

இல் - இலை = நொய்ய இலைவகை.

உள் - எள் - எண்மை, எள் - எளி - எளிமை.

எள் - ஏள்  - ஏட்டை = எளிமை.

ஏள் - ஏழ் - ஏழமை. ஏழ் - ஏழை.

உள் - இள் - இளை - இளைப்பு = எளிமை.

இள் - இள - இளப்பு - இளப்பம்.

இள் - இள - இளப்பு - இளப்பம்.

சுள் - சுளு - சுளுவு.

நுள் - நொள் - நொய் - நொய்ப்பு - நொய்ப்பம் = இலேசு, எளிமை, சிறுமை.

நொய்யவன் = சிறியவன்.