பக்கம் எண் :

127

ii. உட்கொள்ளுதல்

உட்கொள்ளுதலாவது வாய்க்குட் புகுத்துதல் அல்லது உண்ணுதல்.

உள் - உண் - உண - உணா - உணவு.

உண் - ஊண் - ஊட்டு - ஊட்டம்.

ஊட்டு - ஊட்டி = ஊட்டப்படும் பன்றி.

உள் - உறி - உறிஞ்சு (ஒலிக்குறிப்போடு கூடியது). உறிஞ்சுதல் = நீரை உள்ளிழுத்தல்.

குள் - கொள் - கொண்டி = உணவு.

சும்பு - சூம்பு - சூப்பு (ஒலிக்குறிப்போடு கூடியது). சூப்புதல் = சாரத்தை அல்லது சத்தை உள்ளிழுத்தல்.

துல் - துன் - துற்று = உணவு. துற்றுதல் = உண்ணுதல்.

துற்று - துற்றி = உணவு.

துன் - தின் - தீன் - தீனி.

தின் - தின்றி - திற்றி = உணவு.

தீன் - தீறு. தீற்றுதல் = ஊட்டுதல்.

துள் - துய். துய்த்தல் = உண்ணுதல், நுகர்தல்.

தும் - து. துத்தல் = உண்ணுதல். து = உணவு.

து - துப்பு = உணவு.

நுள் - நுழு - (நுகு) - நுகர். நுகர்தல் = உண்ணுதல், துய்த்தல் (அனுபவித்தல்).

நுள் - நொள் - நொண்டு - நொண்டல் = நுகர்கை.

புள் - புழு - புகு - புகா = சோறு. புகா - புகவு = உணவு.

புள் - புசி - பொசி. பொசித்தல் = உண்ணுதல்.

முள் - முடு - மடு. மடுத்தல் = வாயிலிடல், உண்ணுதல்.

மடு - மடை = உணவு, சோறு.

முள் - (முசி) - மொசி. மொசித்தல் = தின்னுதல்.