பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

புறம் - புற = முல்லைநிலப் பறவை வகை. புற - புறா - புறவு - புறவம்.

பிட்டம் - பீட்டன் = புறம்பானவன்.

vi. பின்னிடல்

இள் - இளித்தல் = வாயிதழைப் பின்னுக்கிழுத்தல், வாயைத் திறந்து பல்லைக் காட்டல்.

இள் - இரி. இரிதல் = பின்னுக்கோடுதல், தோற்றோடுதல், ஓடுதல்.

இள் - இட. இடத்தல் = இலை பூ முதலியவற்றைப் பின்னுக் கிழுத் தொடித்தல்.

இள் - (இண்) - இணுங்கு. இணுங்குதல் = திருகிப் பின்னுக் கிழுத்தல், பின்னுக்கிழுத் தொடித்தல்.

இட - இடக்கு = பிற்செலவு. குதிரை இடக்குப் பண்ணுகிறது என்னும் வழக்கைக் காண்க.

இட - இடை. இடைதல் = பின்வாங்குதல்.

இடை - இடைஞ்சல் = பின்வாங்கச் செய்யும் தடை.

இட - இடறு. இடறுதல் = பின்னுக்குத் தள்ளுதல்.

(3) இழுத்தலியல்

இயல்பாக இழுத்தலென்பது, முன்னாலுள்ள பொருளைப் பின்னுக்கு வலிந்து கொணர்தலாதலின், பின்மைக் கருத்தில் இழுத்தற் கருத்துத் தோன்றிற்று.

i. இழப்பு

இள் - இளை - இளைப்பு. இளைத்தல் = மூச்சு வேகமாய் இழுத்தல்.

இள் - இழு - இழுப்பு. இழு - இழுவை.

இழு - இழை = இழுக்கப்பட்ட நூல். இழைத்தல் = நூல் இழைத்தல். உளியை இழுத்துத் தேய்த்தல். இழை - இழைப்பு. இழைப்புளி = இழைக்கும் உளி.

இள் - இரு - ஈர். ஈர்த்தல் = இழுத்தல், இழுத்தறுத்தல்.

ஈர் - ஈருள் = மூச்சிழுக்கும் உறுப்பாகிய ஈரல்.