பக்கம் எண் :

135

ஈர் - ஈரல்.

ஈர் - ஈர்க்கு - அறுக்கும் அல்லது அறுக்கப்பட்ட சிம்பு.

ii. இழுப்புநோய்

இள் - இளை - இளைப்பு. இளை - ஈளை = காசம்.

இள் - இழு - இழுப்பு. இழு - இசு - இசிவு = சன்னி. இசித்தல் = நரம்பிழுத்தல்.

iii. எழுதுதல்

எழுத்துக் கோட்டாலமைவதாலும், முன்னிருந்து பின் அல்லது மேலிருந்து கீழ் இழுத்தே இயல்பாக நட்டுக் கோடு வரையப்படுவதாலும், இழுத்தற் கருத்தில் எழுதுதற் கருத்துத் தோன்றிற்று. கோடிழுத்தல் என்னும் வழக்கு இயல்பாகக் கோடு கீறும் திசையை உணர்த்தும்.

இல் - இலகு - இலக்கு = (எழுத்து, சொல், நூல்).

இலக்குதல் = இழுத்து வரைதல், வரைதல், எழுதுதல்.

“இரேகை யிலக்குக”                                      (சைவச. பொது. 274)

இலக்கு - இலக்கியம் = நூல், நூற்றொகுதி.

இலக்கு - இலக்கணம் = நூன்மொழி யொழுங்கு, அதைக் கூறும் நூல்.

இலக்கு - இலக்கி. இலக்கித்தல் = வரைதல்.

“இவ்வுருவு நெஞ்சென்னும் கிழியின் மேலிருந் திலக்கித்து”             (சீவக. 180)

இலக்குதல் = எழுதுதல், குறித்தல்.

இலக்கு = குறி, குறித்த இடம், இடம், குறிப்பொருள், நோக்கம்.

இலக்கு - இலக்கம் = எண்குறி, எண்.

இழு - இழுகு. இழுகுதல் = இழுத்துத் தடவுதல், தடவுதல்.

இழு - (இழுது) - எழுது - எழுத்து = வரைவு, ஓவியம், வரி, இலக்கியம்.

எழுதுதல் = இழுத்து வரைதல், வரைதல்.

ஆரியர் இந்தியாவிற்குட் புகுமுன்னரே, தமிழுக்கு இலக்கணம் வகுக்கப்பட்டிருந்ததனாலும், வேறெம் மொழியிலுமில்லாத பொருளிலக்கணம் தமிழுக்கிருத்தலாலும்,