பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

i. ஒட்டிச் செல்லுதல்

ஊர்தல் = நிலத்தை யொட்டிச் செல்லுதல், உடம்பையொட்டி நகர்தல்.

உடு - உடும்பு = நிலத்தையும் சுவரையும் ஒட்டிப் பற்றும் உயிரி.

ஊணான் = நிலத்தை ஒட்டிப் படரும் கொடி.

ஓணான் = நிலத்தையும் மரத்தையும் ஒட்டிச் செல்லும் ஊருயிரி. ஓணான் - ஓந்தான் = ஓந்தி - ஓதி.

ஒட்டு - அட்டு - அட்டை = நிலத்தையும் மரத்தையும் ஒட்டிச்செல்லும் புழுவகை.

மரஅட்டை - மரவட்டை.

ஒள் - ஒண் - ஒண்டு. ஒண்டுதல் = மரம் சுவர் முதலியவற்றைச் சார்தல்.

ஒண்டிக்குடி = ஒட்டுக்குடி.

(புல்லி) - பல்லி = மரத்தொடும் சுவரொடும் பொருந்தி இருப்பது.

“அச்சுடைச் சாகாட் டாரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போல”                                          (புறம். 256)

“பொருந்தலாற் பல்லி போன்றும்”                                  (சிலப். 5:29)

ii. உடனுறுதல

உடு - உடல் = உயிருடனிருப்பது. உடல் = உடம்பு.

உடு - உடங்கு - உடக்கு = போலியுடம்பு.

உடன் - உடன்படு - உடம்படு.

உடங்கு = கூட.

உடந்தை = கூட்டு.

ஒல் - ஒரு - ஒருங்கு.

கூடு - கூட்டு.

iii. ஒன்றுதல்

உறுதல் = ஒன்றுதல்.

உல் - ஒல். ஒல்லுதல் = பொருந்துதல்.