பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

சுள் - செள் - செறி - செறிவு.

துள் - திள் - திண் - திட்பு - திட்பம்.

திண் - திணுகு - திணுங்கு - திணுக்கம். திண் - திணி.

நுறு - நெறி. நெறித்தல்=விறப்பாகுதல்.

முள் - முறு - முறுகு - முறுகல் = சூட்டினால் இறுகியது.

முறு - முற - முறமுறப்பு = விறப்பு.

முறு - விறு - விற - விறப்பு.

விறு - வெறு - வெறி. வெறித்தல் = செறிதல்.

விற - விறை. விறைத்தல் = குளிரால் இறுகுதல்.

முள் - (மொள்) - மொய். மொய்த்தல் = இறுகுதல்.

ix. திண்ணம்

திண்ணம் என்பது தட்டையான பொருளின் பருமன். உரம் = திண்ணம்.

ஓலை = திண்ணிய இலை. மெல்லிய தகட்டை ஓலையாயிருக்கிறது என்று கூறும் வழக்கமிருப்பினும், இலையைவிட ஓலை திண்ணமாயிருத்தலைக் கவனிக்க.

ஓடு - திண்ணமான காய்த்தோல்.

குள் - கள். கட்டு - கட்டி - கெட்டி. கெட்டிக் காப்பு = திண்ணமான காப்பு.

துள் - தொள் - தோள் - தோடு = திண்ணமான பழத்தோல், ஓலை.

துள் - (தின்) - திண் - திண்ணம்.

துல் = தில் - திர் - திரம் - திறம் - திறன்.

முள் - முரள் - முரண் = திண்ணமான சிப்பி.

x. கனம்

திண்மையானதும் திண்ணமானதும் கனக்கும்.

குரு = கனம். குரு - குரூஉ.

“பசுமட் குரூஉத் திரள்”                                            (புறம். 32)

குல் - கல் - கன் - கன - கனம்.

(புள்) - (பள்) - பளு - பளுவு.