பக்கம் எண் :

65

xi. வலிமை

கனமுள்ளது வலியது.

உரம் - உரன். உரம் - உரவு - உரவோன் = வலியோன்.

உறு - எறுழ் = வலி.

குள் - கள் - கட்டு - கட்டி - கெட்டி.

துல் - தில் - திர் - திரம் - திறம் - திறன் - திறல்.

திறம் - திறமை.

பொரு - போர் = வலிமை.

முல் - முன் - முன்பு = வலிமை.

முல் - மல் = வலிமை.

மல்=வல் - வலி - வலிமை.

வல் - வலு - வலுவு.

வல் - வன் - வன்பு - வற்பு.

வல் - வலம் = வலிமை, வெற்றி.

வலக்கை = பயிற்சியினால் வலிமைபெற்ற கை.

வலம் = வலக்கைப் பக்கம். வலம் - வலவன் = வலப்பக்கத்துக் காளை, ஊர்தியை வலமாகப் பொறிதிரித் தோட்டுபவன். வலம் வருதல் = நகரை வலமாகச் சுற்றிவருதல்.

முள் - மொள் - மொய் = வலிமை. மொய் - மொய்ம்பு = வலிமை.

முள்(மள்) - வள் = வலிமை.

xii. கடினம்

வலியது கடினமானது.

குல் - கல் = கடினமானது. கல் - கன்று. கன்றுதல் = காய் கிழங்கு முதலியன கடினமாதல். கன்று - கண்டு.

குள் - கள் - கடு - கடுமை.

கடு - கடினம். கடு - கட்டம்.

வள் - (வய்) - வயிர். வயிர்த்தல் - வயிரங் கொள்ளுதல், செற்றங் கொள்ளுதல். வயிர் = கொம்பு. வயிர் - வயிரம் - வைரம்.

வயிர் - வயிரி. வயிரித்தல் = கடினமாதல்.

வயிர் - வயிரி - வைரி = பகை, பகைவன்.