பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

பண் - பண்டு - பண்டம் = செய்யப்பட்ட பொருள்.

பண்டம் - பண்டாரம் = பொருள்கள் தொகுக்கப்பட்ட இடம், களஞ்சியம், கருவூலம், நூலகம், அறிவன், துறவி, பூசாரி.

பண்டாரம் - பண்டாரி.

பண்டு - பண்டுவன் = பல பொருட்குணம் அறிந்த மருத்துவன்.

பண்டுலன் - பண்டுவம் = மருத்துவம். பண்டு - பண்டிதன் - பல நூற் பொருளறிந்த புலவன், மருத்துவன். பண்டிதன் - பண்டிதம்.

பண் - பணி = பொருள், செய்யப்பட்ட அணிகலம்.

பணி - பணிகன் - வணிகன் = பொருள்களை விற்பவன். வணிகன் - வாணிகன் - வாணியன்.

பண் = பண்ணப்பட்ட இசை. பண் - பாண் - பா. பாண் - பாணி.

பாண் - பாடு - பாட்டு. பாண் - பாணன். பண் - பண்ணியம் = கிளைப்பண். பண் - பண்டர் = பாணர்.

viii. செய்யும் உறுப்பு (கை)

கரு - கரம் (வ.).

செய் - (சை) - கை. செய் = கை (தெ.).

பண் - பாணி.

ix. வளம்

பொருள் மிகுவதனால் வளமுண்டாகும்.

குள் - கொழு - கொழுமை. கொழு - கொழுப்பு - கொழுமை - கெழுமை.

சுள் - செழு - செழுமை. செழு - செழுது - செழுத்து - செழுந்து = செழிப்பு.

செழு - செழுப்பு - செழுப்பம் = செழிப்பு. செழுப்பு - செழும்பு - செழும்பல்.

செழு - செழி - செழிப்பு - செழிம்பல்.

செழி - செழியன்.

முல் - மல் - வளம். மல் - மல்லல் = வளம்.

“மல்லல் வளனே”                                             (தொல். உரி. 7)

முள் - மள் - வள் - வண்மை = வளம், வளத்தாலாகும் ஈகை. வள்ளல். வள் - வளம் - வளவன்.