பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

வட்டு - வட்டரவு = வட்ட வடிவு.

வள் - வண்டு = வளையல், வட்டமான பூச்சி.

வண்டு - வண்டி = சக்கரம், சக்கரத்தையுடைய ஊர்தி. வண்டி - வண்டில்.

வள் - வாள் - வார் - வார்ப்பு = வளையல்.

வாள் - வாளி = மூக்கிலும் காதிலும் அணியும் கம்பி வளையம்.

ii. சூழ்தல்

சூழ்தலாவது ஒன்று இன்னொன்றைச் சுற்றி வளைதல்.

உள் - உடு. உடுத்தல் = சுற்றிக் கட்டுதல். உடு - உடுப்பு. உடு - உடை.

உடுத்தல் = சூழக்கொண்டிருத்தல்.

“நீராருங் கடலுடுத்த நிலமடந்தை”                             (மனோன்மணீயம்)

உல் - உலவு - உலாவு. உலாவுதல் = சூழ்தல்.

“தூசுலாய்க் கிடந்த”                                              (சீவக. 550)

ஊர் = கதிரவன் திங்களைச் சூழும் வட்டக்கோடு.

“செங்கதிர் தங்குவதோ ரூருற்றது”                            (கம்பரா. சரபங். 9)

ஊர்கோள் = நிலாவைச் சுற்றியிருக்குங் கோட்டை.

குள் - கொள் - கோள் - கோடு - கோட்டை = நகரைச் சூழ்ந்திருக்கும் மதில், நிலாவைச் சூழ்ந்திருக்கும் ஊர்கோள்

சுல் - சுற்று - சுற்றம். சுற்றுதல் = சூழ்தல்.

சுள் - சூழ். சூழ்தல் = நாற்புறமும் வளைதல், அங்ஙனம் வளைதல்போல் ஒரு காரியம் பற்றிய எல்லாவற்றையும் எண்ணுதல். சூழ் - சூழ்ச்சி - சூழ்ச்சம் = மந்திரம் (ஆலோசனை), நுண்ணறிவு, விரகு (உபாயம்).

சூழ்ச்சி - சூழ்ச்சியம் = மதி நுட்பமான அமைப்பு.

சூழ் - சூழல் = சுற்றுச்சார்பு, இடம்.

சுள் - (சூள்) - சூட்டு = சக்கரத்தின் சுற்றுச்சட்டம்.

சூறுதல் = சூழ்தல்.

“சூறிள விமையோர்”                                    (பாரத. காண்டவ. 31)