சண்ட மாருதம் சோமசுந்தரம் நாயகரை அழைத்து வந்து சிவபிரானின்பெருமைகளை எடுத்துக் கூறச் செய்தார். பின்னர் சைவ சித்தாந்த சபை என்ற பெயருடன்ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். இவ்அவையில் சித்தாந்தச் சொற் பொழிவுகள் நிகழஏற்பாடு செய்தார். இதன் வாயிலாக மறைமலையடிகளின் தொடர்பும் இவருக்கு ஏற்பட்டது.இவ் அவையில் இவர் நிகழ்த்திய சொற் பொழிவுகளும் பல. விரைந்து செய்யுள் இயற்றும்ஆற்றலும் இவரிடம் இருந்தது. நூல் : | “பழநி வெண்பா” என்னும் நூலுக்கு வழங்கிய சிறப்புப்பாயிரச்செய்யுள். |
மதுரைப் படைமங்க மன்னியார் (சங்ககாலம்) ஓரிடத்தில் நிகழ்ந்த போரின்கண் தானைத் தலைவன் ஒருவன் தன் படைமுழுவதும்அழிந்த பின்னரும் பகைவரொடு பொருது வென்றியால் புகழ்நிறுவ அவனைப் படைமங்க மன்னினான் என்று சிறப்பித்துப் பாடிய காரணங்கருதி இவர் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று கருதுவர். இவர் வானக என்ற ஊரில் வாழ்ந்த எயினன் என்ற தலைவனால் சிறப்புற ஆதரிக்கப்பெற்றவர். மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார் (சங்ககாலம்) இவர் ஊரொடு தொடர்ந்த பெயர் கொண்ட சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் பற்றிய வரலாற்றுச் செய்திகள் எதுவும் தெரியவில்லை.
|