140என் சரித்திரம்

ரெட்டியார் இயல்பு

      செங்கணத்தில் நாட்டாண்மைக்காரரில் பெரிய பண்ணையார், சின்னப்
பண்ணையார், பட்டத்துப் பண்ணையார் என்ற பகுப்பினர் இருந்தனர்!
விருத்தாசல ரெட்டியார் சின்னப் பண்ணையார் என்னும் பகுப்பினர். இம்
மூவகையினரையும் நாட்டார் என்று வழங்குவர். அவர்களுக்குத் தமிழ்ப் பயிற்சி
இருந்தமையால் எங்களிடம் அன்பு வைத்து அவ்வப்போது வேண்டிய
உபகாரங்களைச் செய்து வந்தார்கள். அவர்களில் சிலர் சைவ சமயத்தையும்
சிலர் வைணவ சமயத்தையும் தழுவியவர்கள். ஆயினும் அவர்களுக்குள் விவாக
சம்பந்தம் முதலியன உண்டு.

      விருத்தாசல ரெட்டியார் குட்டையான வடிவினர். கறுப்பு நிறத்தினர்.
தேகம் பள பளப்பாக இருக்கும். எப்பொழுதும் சுத்தமாக இருப்பார். காலை
ஐந்து மணிக்கு எழுவார். ஊரைச் சுற்றிலும் காடுகளும் நீரூற்றமும் மணற்
பரப்புமுள்ள ஓடைகளும் உண்டு. ஏதேனும் ஒரு பக்கம் சென்று தந்த சுத்தி
முதலியவற்றை முடித்துக்கொண்டு ஏழு மணிக்கு வீட்டிற்கு வருவார். கால்
கையைச் சுத்தம் பண்ணிக் கொள்வதற்கும் முகத்தைச் சுத்தம் பண்ணிக்
கொள்வதற்கும் அரை மணி நேரம் பிடிக்கும். பிறகு திருநீற்றை உத்தூளனமாக
இட்டுக் கொண்டு படிக்கத் தொடங்குவார். பதினொரு மணி வரையிற் படித்துக்
கொண்டேயிருப்பார். படிக்கும் நூல்களிலுள்ள ஒவ்வொரு விஷயத்தையும்
ஆழ்ந்து படித்துச் சிந்தித்துச் செல்வார் மத்தியான உணவுக்குப்பின் இரண்டு
மணி முதல் இராத்திரி எட்டு மணி வரையில் படித்துக் கொண்டே இருப்பார்.
படிப்பதில் அவருக்குச் சலிப்பே தோற்றாது. இரவில் போஜனம் ஆன பிறகு
தம்முடைய மூத்த குமாரராகிய நல்லப்ப ரெட்டியாருக்குக் கம்பராமாயணப்
பாடம் சொல்வார். அவர் பேச்சு மிகவும் திருத்தமாக இருக்கும்.

      கல்விச் செல்வமும் பொருட் செல்வமும் ஒருங்கே பெற்றிருந்தமையின்
அவருக்கு நல்ல மதிப்பு இருந்தது. அடிக்கடி யாரேனும் அயலூரிலிருந்து வந்து
இரண்டொரு நாள் தங்கி அவரிடம் சம்பாஷித்துச் செல்வார்கள்.

      அவர் கன்னையரென்னும் வீர சைவரிடம் பாடங் கேட்டவர். வீர
சைவர்களுக்கும் ரெட்டியார்களுக்கும் ஒற்றுமையும் நட்பும் அதிகமாக இருந்தன
வீர சைவ வித்துவ சிகாமணியாகிய துறை மங்கலம் சிவப் பிரகாசரை
அண்ணாமலை ரெட்டியார் என்னும் செல்வர் ஆதரித்துப் பாதுகாத்த
வரலாற்றை அவ்விரு வகையினரும்