பலவகைக் கவலைகள் 595

      “என்னவோ படிக்கிறீர்களே! கேட்க வந்தேன்” என்றார் அவர்

      “அங்கே ஏன் நிற்கிறீர்கள்? உள்ளே வாருங்கள்” என்றேன். அவர்
வந்தார். “படிக்க வருமா?” என்று நான் வினவ, அவர் ‘படிப்பேன்” என்று
சொன்னார்.

      உடனே நான் கையெழுத்துப் பிரதியை அவரிடம் கொடுத்துப் படிக்கச்
சொன்னேன். புரூபை நான் பார்த்துத் திருத்தி வந்தேன். அவர் படிக்கையில்
அதில் மனத்தைச் செலுத்திப் படித்தார். கிராமங்களில் தமிழ் வளம்
நிரம்பியிருப்பதை அவர் மூலமாக அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.

      ஒரு சமயம் என் நண்பராகிய தஞ்சை வக்கீல் கே. எஸ், ஸ்ரீனிவாச
பிள்ளை சென்னைக்குக் கிறிஸ்துமஸ் வேடிக்கை பார்க்க வந்த ஒருவர் முகமாக
எனக்கு, “நீங்கள் பதிப்பித்து வருகிற சிந்தாமணி அச்சுப் பாரங்களை
எப்படியாவது முயன்று தமக்கு அனுப்பி வர வேண்டுமென்றும்,
அச்சுக்கூடத்தாருக்குப் பெருத்த தொகை கொடுப்பதாகவும், ஒருவர் சூழ்ச்சி
செய்கிறாராம். இதை நாகை நீலலோசனி பத்திராதிபராகிய சதாசிவம் பிள்ளை
தெரிவித்தார். நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்று சொல்லி
அனுப்பினார். அதைக் கேட்டவுன் எனக்கு மிக்க கவலை உண்டாயிற்று.
அச்சுக்கூடத் தலைவராகிய கோவிந்தாசாரியாரிடம் சொன்னேன். அவர் மிக்க
நல்லவர். “நீங்கள் இதுபற்றிச் சிறிதும் கவலைப்பட வேண்டாம். யாரோ
வேண்டுமென்று செய்யும் புரளி இது. இங்குள்ள வேலைக்காரர்கள் மிகவும்
நம்பிக்கையானவர்கள். இங்கே அச்சிடும் விஷயங்களை இரகசியமாகவே
வைத்திருப்பார்கள்” என்று அவர் தைரியம் சொன்னார்.

      ‘நல்ல காரியத்திற்கு எத்தனை விக்கினங்கள்?’ என்று எண்ணி இதை
இறைவன் திருவருளைத் துணையாகச் சிந்தித்துக் கொண்டு பதிப்பு வேலையைக்
கவனிக்கலானேன்.

பீப்பிள்ஸ் பார்க்கில் தீ

      ஒரு நாள் மாலை ஆறரை மணிக்கு அச்சுக்கூடத்தில் நான் புரூப்
பார்த்துக் கொண்டிருந்தபோது கோவிந்தாசாரியார் மிகவும் கலக்கமடைந்த
முகத்தோடு என்னிடம் வந்தார். “என்னாங்க! சமாசாரம் கேள்விப்பட்டீங்களா?“
என்று கேட்டார். “என்ன?” என்று நான் வேகமாக விசாரித்தேன்.

      “தீப்பிடித்து விட்டுதுங்களாம்” என்று சொல்லி மேலே பேசாமல்
நிறுத்தினார். எனக்குப் பகீரென்றது. எப்போதும் சிந்தாமணி