பத்துப்பாட்டுப் பதிப்பு 661

புதுப் பாட்டுப் பதிப்பு

      பார்த்து நான் வந்த விஷயத்தைச் சொல்லி அச்சுக்கூடமொன்றைத்
திட்டம் செய்ய வேண்டுமென்று தெரிவித்தேன். அவர் சிந்தாமணியை அச்சிட்ட
திராவிட ரத்நாகர அச்சுக்கூடத்திலேயே கொடுத்து விடலாமென்று சொல்லவே
அங்கேயே பதிப்பிக்க ஏற்பாடு செய்தேன்.

      அச்சுக்கூடத் தலைவர் கையெழுத்துப் பிரதியைப் பார்த்துவிட்டு,
“சிந்தாமணியை விட இதில் வேலை அதிகம் இருக்கிறது. இதற்கு அதிகக் கூலி
கொடுக்க வேண்டும்” என்று கேட்டார். பழகின இடமென்ற எண்ணத்தால்
அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டேன்.

விடுதி

      இராமசுவாமி முதலியார் பங்களாவில் ஜாகையும் புரசைப்பாக்கத்தில் ஒரு
விடுதியில் உணவும் வைத்துக் கொண்டு அவதானம் பாப்பையர் வீதியிலிருந்த
அச்சுக்கூடத்தில் அச்சு வேலையைக் கவனித்து வந்தேன். இது சிரமமாக
இருந்தமையால் நான் உணவு கொள்ளும் விடுதியிலேயே ஓர் அறையில் தங்கி
இரவு நேரங்களில் புரூப் முதலியன பார்த்து வந்தேன். அந்த அறையை
வாடகைக்கு வைத்துக்கொண்டு படித்து வந்தவராகிய கதிராமங்கலம்
சுப்பிரமணிய ஐயரென்னும் மாணாக்கரே இவ்வாறு செய்யலாமென்று சொல்லி
எனக்காக ஏற்பாடு செய்தார்.

      பத்துப்பாட்டு மூலப் பிரதியையே பாராத நான் சென்னையில் பின்னும்
எங்கேனும் வித்துவான்கள் வீடுகளில் ஏடுகள் கிடைக்குமோ என்று விசாரித்துக்
கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஒரு பெரிய வித்துவானுடைய ஞாபகம்
வந்தது.

அண்ணாசாமி உபாத்தியாயர் வீடு

      பல வருஷங்களுக்கு முன் மயிலாப்பூரில் திருவம்பலத்தின்ன
முதம்பிள்ளையென்ற ஒரு பெரிய வித்துவான் இருந்தார். அவர் திருநெல்வேலி
அம்பலவாண கவிராயருடைய மாணாக்கர்; பழைய தமிழ் நூல்களில் தேர்ந்த
அறிவினர்; பிள்ளையவர்கள் இளமைக் காலத்தில் சென்னைக்குச்
சென்றிருந்தபோது அந்த வித்துவானிடம் சில நூல்களைப் பாடங் கேட்டார்.
திருவம்பலத்தின்னமுதம் பிள்ளையிடம் ஏட்டுச் சுவடிகள் இருந்தனவென்று என்
ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.

      இந்தச் செய்திகள் என் நினைவுக்கு வந்தவுடனே, ‘மயிலாப்பூரில் அவர்
வசித்த வீடு எங்கே இருக்கிறது? அவருடைய சந்ததியார்