பயனற்ற பிரயாணம் 675

      பற்றுடையவர். அவர்பால் நூற்றைம்பது வருஷங்களுக்கு முன்
எழுதப்பட்டனவான கம்ப ராமாயணப் பிரதிகள் பத்து இருந்தன. போகும்
இடங்களிலெல்லாம் எங்கெங்கே ஏட்டுச் சுவடிகள் உள்ளனவென்பதை
விசாரித்துக் கொண்டே இருந்தேன்.

சிற்பச் செல்வம்

      தாரமங்கலமென்னும் ஊரில் உள்ள ஆலயத்தில் மிகவும் சிறந்த
சிற்பங்கள் உள்ளனவென்றும், அங்குள்ள ஆதி சைவர்கள் வீடுகளில் பழஞ்
சுவடிகள் இருக்குமென்றும் கேள்வியுற்று அங்கே போனேன். முதலில் ஆதி
சைவர்களை அணுகி அவர்களிடமுள்ள ஏடுகளைக் கவனித்தேன். பெரும்பாலும்
ஆகமங்களும் பத்ததிகளுமாகவே இருந்தன.

      ஆலயத்திற்குச் சென்றேன். நான் கண்ட சிற்பக் காட்சியை எழுதித்
தெரிவிப்பதென்பது இயலாத காரியம். ஒவ்வொரு தூணிலும் மிகப் பெரிய சிற்ப
உருவங்களைக் கண்டேன். ஒன்றைப் பார்த்து அனுபவிக்க ஒரு நாள்
வேண்டும். இராமர் வாலியை எய்யும் கோலத்தை விளக்கும் சிற்பம் ஒன்று
உண்டு. இராமர் உருவத்தின் அருகிற் சென்று பார்த்தால் வாலியின் உருவம்
தெரிகிறது. வாலியின் உருவத்துக்கருகிலிருந்து பார்த்தால் இராமபிரான் உருவம்
தெரியவில்லை. இராமர் மறைந்திருந்து வாலியை எய்தாரென்ற வரலாற்றைச்
சிற்பி எவ்வளவு நன்றாக அமைத்துக் காட்டியுள்ளானென்றெண்ணி வியந்தேன்.
அந்த ஆலயத்துக் கெதிரில் வேறு ஒரு சிவாலயம் உண்டு. அதனுள்ளே பல
லக்ஷம் பொருட் செலவு செய்தாலும் அமைப்பதற்கரிய சிற்ப உருக்கள் பல
இருந்தன. எல்லாம் சிறிய அளவில் சிற்பியின் வித்தகத்தைத் திறனை நன்றாக
விளக்கும் அற்புத வடிவங்களாக உள்ளன. அந்தக் கோவிலுக்கு மூங்கிற்
பிளாச்சினால் செய்யப்பட்ட ஒரு கதவை அமைத்திருந்தார்கள். உள்ளே
கலையழகு பொழியும் சிற்ப உருவக் களஞ்சியம் நம் முன்னோர்களின் உயர்ந்த
கலைத் திறமைக்கு அடையாளமாக நிலவியது; புறத்திலோ நம் காலத்தினரது
அசட்டைக்கும் வறுமைக்கும் அடையாளமாக அவலக்ஷணமான மூங்கிற்
பிளாச்சுக் கதவு நின்றது. “இதற்குள்ளே என்ன இருக்கப் போகிறது?” என்ற
நினைவை அந்தக் கதவு உண்டாக்கும். ஆனாலும் உண்மை தேர்பவர்கள்
அதன் விகார ரூபத்ைதைப் பொருட்படுத்தாமல் உள்ளே சென்றால்
அரும்பெறற் சிற்ப விலாஸத்தைக் கண்டு மகிழலாம். மூங்கிற் பிளாச்சுக்
கதவைத் திறந்தபோது என் கையை அது