புறநானூற்று ஆராய்ச்சி 727

      தொல்காப்பியப் பொருளதிகார உரையில் பல இடங்களில் புறநானூற்றுச்
செய்யுட்கள் மேற்கோளாக வந்துள்ளன. என் கையிலிருந்த புறத்திரட்டில் பல
செய்யுட்கள் இருந்தன. இவற்றைக் கொண்டு என்னிடமிருந்த புறநானூற்றுப்
பிரதிகளில் கிடைக்காத பல குறையான பகுதிகளை நிரப்பிக் கொண்டேன்.

      புறநானூறு 400 செய்யுட்களடங்கியது. நான் செய்த சோதனையின்
முடிவில் 267, 268-ஆம் பாடல்கள் எங்கும் கிடைக்க வில்லை பல
பாடல்களுக்கு முதல் இல்லை; பலவற்றிற்கு இறுதிப் பகுதி இல்லை; பலவற்றில்
இடையிடையே சில பகுதிகள் காணப் படவில்லை.

உரை

      என்னிடமுள்ள புறநானூற்றுப் பிரதிகளில் சிலவற்றில் பழைய உரை
ஒன்று இருந்தது. அவ்வுரையாசிரியர் இன்னாரென்று புலப்பட வில்லை.
அவ்வுரையும் முதல் 260 பாடல்களுக்கே இருந்தன. 242-ஆம் பாடலுக்கு மேல்
உள்ள உரையோ இடையிடையே சிதைந்து மாறியிருக்கிறது. அவ்வுரையாசிரியர்
பதப் பொருளை இனிது விளக்கி உரிய இடங்களில் சொற்களை முடித்துக்
காட்டி இலக்கணக் குறிப்பையும் திணை துறைகளையும் ஆங்காங்குள்ள
பழமொழிகளையும் அணியையும் சொல்நயம் பொருள் நயங்களையும்
புலப்படுத்துகிறார். இடையிடையே சில வாக்கியங்கள் அவ்விடத் திற்குப்
பொருத்தமில்லாதனவாகத் தோற்றின. அவர் சில இடங்களில் சில
விஷயங்களை மறுத்திருக்கிறார். அதனால் புறநானூற்றுக்குப் பழைய உரை
ஒன்று இருந்திருக்கலாமென்ற எண்ணம் உண்டாகிறது.

திணையும் துறையும்

      ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் திணையும் துறையும், பாடினோர்
பெயரும், பாடப் பட்டோர் பெயரும் உள்ளன. நச்சினார்க்கினியர்
தொல்காப்பிய உரையில் ஓரிடத்தில், “தத்தம் புது நூல் வழிகளால்
புறநானூற்றுக்குத் துறை கூறினாரேனும் அகத்தியமும் தொல்காப்பியமுமே
தொகைகளுக்கு நூலாகலின் அவர் சூத்திரப் பொருளாகத் துறை கூறவேண்டு
மென்றறிக” என்று எழுதியிருக் கிறார். அவர் கருத்து அவ்வாறு இருந்தாலும்
பிரதிகளில் உள்ள திணை துறைகளையே கொள்ளுதல் நெடுங்காலமாக வந்த
வழக்கமாகி விட்டது. அவை பெரும்பாலும் பன்னிரு படலமென்ற பழைய
புறப்பொருள் இலக்கணத்தின் படி அமைந்திருத்தல் கூடுமென்று