பெற்றிருந்தது. செம்பியன், வளவன், சென்னி முதலிய பெயர்கள் அவற்றுள்
சிறந்தனவாம்.20
செங்கற்பட்டிலுள்ள செம்பியம், வடஆர்க்காட்டில் உள்ள
செம்பிய மங்கலம், தஞ்சை நாட்டிலுள்ள
செம்பிய நல்லூர், பாண்டி
நாட்டிலுள்ள
செம்பிய னேந்தல் முதலிய ஊர்கள்
செம்பியன் பெயரைத்
தாங்கி நிற்கின்றன. தஞ்சை நாட்டிலுள்ள செம்பங்குடி
என்பது செம்பியன்
குடியாக இருத்தல்
கூடும். இனி, தென் ஆர்க்காட்டு
வளவனூர், வட
ஆர்க்காட்டு வளையாத்தூர் என்னும் வளவன் ஊற்றூர்,21 தஞ்சை
நாட்டிலுள்ள வளவ நல்லூர், செங்கற்பட்டிலுள்ள வளவன் தாங்கல்
முதலிய
ஊர்களின் பெயரில்
வளவன் என்னும் சொல் காணப்படுகின்றது.
இன்னும்,
தஞ்சை நாட்டில் சென்னி வனம், சென்னிய
நல்லூர், சென்னிய
விடுதி என்னும் ஊர்கள் உள்ளன.
பாண்டியர்
தமிழகத்திலுள்ள தென்னாட்டை யாண்ட பாண்டி மன்னர்க்குத்
தென்னவன், மாறன், செழியன் முதலிய
சிறப்புப் பெயர்கள் உண்டு.22 அவை
யாவும் ஊர்ப் பெயர்களில் அமைந்துள்ளன.
தென்னாட்டிலுள்ள
தென்னன்குடி, தென்னன்பட்டி, தென்னவனல்லூர், தென்னவனாடு
முதலிய
ஊர்கள் தென்னவனோடு தொடர்புடையன
என்பது தேற்றம். மாறன்
என்னும்
பெயரை மாறனேரி, மாற மங்கலம், மாறனூத்து முதலிய ஊர்ப்
பெயர்களிலே
காணலாம். நெல்லை நாட்டிலுள்ள செழியனல்லூர் முதலிய
ஊர்களின்
பெயர்களில்
செழியன் என்னும் சிறப்புப் பெயர் விளங்குகின்றது. |