தேவியாய்த் திகழ்ந்தாள். நெல்லை நாட்டிலுள்ள சேரமாதேவி என்னும்
சேரவன் மாதேவி. அம்
மங்கையின் பெயரால் அமைந்த ஊர் என்று
கருதலாகும்.27
வீரபாண்டியன்
தஞ்சைச் சோழர் தலையெடுத்தபோது பாண்டியர் பணியத்
தொடங்கினர். பத்தாம் நூற்றாண்டின்
தொடக்கத்தில் அரசாண்ட பராந்தக
சோழன் பாண்டி மன்னனை இருமுறை வென்று, அவன் தலைநகராகிய
மதுரையையும் கைப்பற்றிக் கொண்டான். இங்ஙனம் பதங் குலைந்த
பாண்டியன் மூன்றாம் இராஜ
சிம்மன் என்பர்.
ஆயினும், அவன்
மைந்தனாகிய வீரபாண்டியன்
சோழரை வென்று, வசை தீர்ப்பதற்குக்
காலம்
பார்த்திருந்தான். அதற்கேற்ற வாய்ப்பும் வந்துற்றது. வடபுலத்து வேந்தன்
ஒருவன்
சோழ நாட்டின்மீது படையெடுத்துக் குழப்பம் விளைவித்தான்.28
அக்காலத்துச் சாசனங்கள்
வீரபாண்டியனைச் ‘சோழன் தலைகொண்ட
கோவீர பாண்டியன்’ என்று பாராட்டுதலால், அவன்
போர்க்களத்தில்
சோழன் ஒருவனைக் கொன்று புகழ் பெற்றிருத்தல் வேண்டும் என்று
தெரிகின்றது.
அவ்வெற்றியின் காரணமாக அவன் சோழாந்தகன் என்னும்
விருதுப் பெயர் பூண்டான்.29 மதுரை நகரின் அருகேயுள்ள சோழாந்தக
சதுர்வேதி மங்கலம் என்னும் ஊர் அவன் பெயர் தாங்கி நிலவுகின்றது.
சோழந்தகன் என்பது சோழவந்தான் என மருவியுள்ளது.30
வீர பாண்டியன் பெயரால் அமைந்த ஊர்கள் இன்னும் சில உண்டு.
நெல்லை நாட்டு நாங்குனேரி
வட்டத்தில் வீரபாண்டியன் நல்லூர் என்று
முன்னாளிற் பெயர்் |