சிவாலயம் அங்கு அமைந்திருந்த தென்பதும் கல்வெட்டால்
அறியப்படுவனவாகும்.34 இத்தகைய
மாறமங்கலம் அங்கெழுந்த ஏரியின்
சிறப்பினால் மாறனேரி யாயிற்றென்று கொள்ளலாம்.
குலசேகரன்
பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் மதுரையில் அரசு புரிந்த
மன்னன் குலசேகர பாண்டியன்.
அவன் ஆட்சியின் இருபத்தைந்தாம்
ஆண்டில் சில சிற்றூர்களைச் சேர்த்து,
இராஜ கம்பீர
சதுர்வேதிமங்கலம்
என்னும்
பெயரால் ஓர் ஊரை உண்டாக்கினான் என்று
திருப்பூவணத்துச்
செப்பேடு
கூறுகின்றது. இராஜ கம்பீரன் என்பது குலசேகர
பாண்டியனது
விருதுப் பெயர் என்று தெரிகின்றது.
இக் காலத்தில்
இராமநாதபுரச்
சிவகங்கை வட்டத்திலுள்ள இராஜ கம்பீரமே அவ்வூராகும்.
ஸ்ரீவல்லபன்
தென்பாண்டி நாட்டுக்குப் பெருந் தொண்டு செய்த பாண்டியன்
ஸ்ரீவல்லபன் என்று கர்ண பரம்பரைக்
கதை கூறுகின்றது. தாமிரவருணி
யாற்றங்கரையில் உள்ள மணப்படை வீடு
அம் மன்னனுக்குரிய படை
வீடுகளில் ஒன்றாக
விளங்கிற்றென்று தெரிகின்றது. அப் படை வீடு,
ஸ்ரீவல்லபன் மங்கலம் என்ற
ஊரின் ஓர் அங்கமாக அமைந்திருந்ததென்று
சாசனம் கூறும்.35 அவ்வூரின் அருகே கொட்டாரம்
என்னும் பெயருடைய
சிற்றூர் காணப்படுகின்றது. கொட்டாரம் என்பது அரண்மனையைக்
குறிக்கும்.
இவ்வூர்களுக்கு எதிர்க்கரையில் செப்பறை என்ற சிற்றூர் அமைந்துள்ளது. |