108ஊரும் பேரும்

ஒரு சிறந்த அரண்மனை அமைத்தான். அந்த நாயக்கன் பெயரால் அமைந்த
ஊர்கள் திருச்சி நாட்டிலுள்ள திருமலை சமுத்திரமும், நெல்லை நாட்டிலுள்ள
திருமலை நாயக்கன் படுகையும் ஆகும்.
 

அரியநாத முதலியார்


     நாயக்கர்கள் மதுரையில் அரசு புரிந்தபோது அவர்க்குப் பெருந்துணை
புரிந்தவர் அரியநாத முதலியார் ஆவர். குழப்பம் நிறைந்திருந்த பாண்டி
நாட்டில் நீர்மையும் ஒழுங்கும் நிலைபெறச் செய்தவர் அவரே. அவர்

நெல்லை நாட்டில் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிப் பயிர்த் தொழிலைப் பண்புற வளர்த்தனர். பொருநை யாற்றிலுள்ள நான்காம் அணைக் கட்டு இன்றும் அரியநாத முதலியார் அணை என்றே அழைக்கப்படுகின்றது. திருநெல்வேலி நகருக்குத் தென் மேற்கே பத்து மைல் தூரத்திலுள்ள அரியநாயகபுரம் என்னம் ஊரின் பெயரிலும் அவர் பெருமை விளங்கக் காணலாம். பொருநை யாற்றின் வடகரையிற் பொருந்தியுள்ள அவ்வூர் வளங்கள் பலவும் நிறைந்த சிற்றூராக விளங்குகின்றது. நாயக்கர் ஆட்சியில் அவர் பெற்ற தளவாய் என்ற பட்டம் இன்றும் நெல்லை நாட்டிலுள்ள தளவாய் முதலியார் குடும்பத்தில் நிலவுகின்றது.
 

வீரராகவ முதலியார்


     திருநெல்வேலி நகரத்தில் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது வீர

ராகவபுரம். அது வீர ராகவ முதலியார் பெயரால் அமைந்த ஊராகும்.

கிருஷ்ணப்ப நாயக்கர் மதுரையில் ஆட்சி