110ஊரும் பேரும்

பல்லவர் குடி மன்னர்

 

பல்லவர் ஆட்சி

 

   பல்லவர் குடியைச் சேர்ந்த அரசர்கள் காஞ்சியைத் தலைநகராகக்
கொண்டு மூன்றாம் நூற்றாண்டிலே தமிழ் நாட்டையாளத் தலைப்பட்டார்கள்.
ஏறக் குறைய அறு நூறாண்டுகள் அன்னார் அரசு புரிந்தனர் என்னலாம்.
சுந்தரர் தேவாரத்திலும், திருமங்கை யாழ்வார் திருப்பாசுரங்களிலும் பல்லவர்
பீடும் பெயரும் குறிக்கபடுகின்றன.41 பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்
அவர் அரசாட்சி நிலைகுலைந்து அழிந்தது. ஆயினும் அக்குல மன்னர்
பெயர் சில ஊர்ப் பெயர்களில் இன்றும் விளங்குகின்றது.
 

சிம்ம விஷ்ணு


     ஆறாம் நூற்றாண்டின் பிற் பகுதியில் அரசு புரிந்த பல்லவன், சிம்ம
விஷ்ணு வர்மன் என்னும் பெயரினன். அவன் சோழ மன்னனை வென்று,
காவிரி நாட்டிலும் ஆணை செலுத்தினான் என்று சாசனம் அறிவிக்கின்றது.
அவன் காலத்தில் காவிரிக்கரையில் கும்பகோண வட்டத்திலுள்ள கஞ்சனூர்,
சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம் என்னும் மறுபெயர் பெற்றது.42 வட
ஆர்க்காட்டிலுள்ள சீயமங்கலமும் அவன் பெயரால் அமைந்த தென்பர்.43
 

மகேந்திரன்

     ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசு புரிந்தவன் மகேந்திரப்
பல்லவன். அவன் பெயர் வட ஆர்க்காட்டிலுள்ள மகேந்திரவாடி என்னும்
ஊரால் விளங்குவதாகும். அவ்வூரில்