விண்ணகரத்தைப் பாடிள்ளார். ‘நந்தி பணி செய்த நகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே’
என்பது அவர் திருவாக்கு.அவ்வூர் இன்று நாதன் கோயில் என
வழங்கும். எட்டாம் நூற்றாண்டின்
தொடக்கத்தில்
அரசுரிமை பெற்ற நந்தி வர்மனின் பெயர் தாங்கி நிற்பது அந்நகரம் என்பர்.
உதய சந்திரன்
அந் நந்திபுர நகரத்தில் வைகிய நந்தி வர்மனைத் தாக்கினர்
பகைவேந்தர். அப்போது பல்லவ
சேனாதிபதியாகிய உதய சந்திரன்
உருத்தெழுந்து, மாற்றார் சேனையைச் சின்ன பின்னமாக்கித்
தன் மன்னனை
விடுவித்தான் என்று உதயேந்திரச் செப்பேடுகள்
உணர்த்துகின்றன. இவ்வாறு,
காலத்தில் உதவி
செய்து, காவலன் நன்றிக் குரியனாய்
உதயசந்திரன்
மாற்றாரைப் பின்னும்
பல போர்க்களங்களில் வென்று
பல்லவர்
பெருமையைப் பாதுகாத்தான். அவ் வீரன், வேகவதி
யாற்றங்கரையிலுள்ள
வில்லிவலம் என்னும் ஊரிற் பிறந்தவன். அவன்
பெயரால் விளங்குவது
உதயேந்திர மங்கலம் என்னும் ஊர். இப்பொழுது வட
ஆர்க்காட்டுக்
குடியாத்த வட்டத்திலுள்ள
உதயேந்திரமே அவ்வூராகும்.48
வயிர மேகன்
தென்னாட்டில் நில வளத்தைப் பேணி வளர்த்த பல்லவ மன்னருள்
ஒருவன் வயிரமேக வர்மன்.
பயிர்த் தொழில் சிறக்கும் வண்ணம் அவன்
தொட்ட குளமும், வெட்டிய வாய்க்காலும் சாசனங்களில்
குறிக்கப்பட்டுள்ளன.
தந்திவர்ம |