குலமும் கோவும் 117

ஒன்பதாம் திருமுறையில் சேர்த்துப் போற்றப்படுவதாகும். அவ்
இசைப்பாட்டில்,

  
“காரார் சோலைக் கோழிவேந்தன் தன் தஞ்சையர் கோன் கலந்த
   ஆரா இன்சொற் கண்டராதித்தன்


என்று வருதலால், அரசாளும் பெருங்குலத்திற் பிறந்தும் அரனடியே
தஞ்சமெனக் கருதிய சீலன் இவன் என்பது நன்கு விளங்குகின்றது. திருச்சி
நாட்டில் கொள்ளிட நதியின் வடகரையில் உள்ள கண்டராதித்தம் என்னும்
ஊர், இவன் உண்டாக்கிய சதுர்வேதி மங்கலம். இம்மன்னனது மறுமை
நலங்கருதி அம் மங்கலம் நிறுவப்பட்டதாகத் தெரிகின்றது.61 இன்னும்,
கண்டராதித்தன் பெயரால் நிலவும் ஊர் ஒன்று தென்னார்க்காட்டுத்
திருக்கோவிலூர் வட்டத்தில் உண்டு. கண்டராதித்தபுரம் என்று பெயர் பெற்ற
அவ்வூர் இந் நாளில் கண்டராச்சிபுரம் என்று வழங்கும்.62
தென்னார்க்காட்டிலுள்ள கண்டமங்கலமும் கண்டராதித்த மங்கலமாய்
இருத்தல் கூடும்.63 அங்ஙனம் இம்மையிலும் மறுமையிலும் செம்மையே
நாடிய இம் மன்னரின் திருவுருவம் கோனேரி ராஜபுரம் என்னும்
திருநல்லத்துக் கோவிலில் இன்றும் காணப்படுகின்றது.64
 

செம்பியன் மாதேவி


    சோழர் குடியில் சீலத்தாற் சிறந்தவள் செம்பியன் மாதேவி. சிவநேசச்
செல்வராகிய கண்டராதித்தரின் முதற் பெருந்தேவி என்னும் உரிமைக்குத்
தக்க முறையில் அம் மாதேவி செய்த திருப்பணிகள் பலவாகும்.65 தஞ்சை
நாட்டில் செம்பியன் மாதேவி என்ற ஊர் இன்னும் அவள் பெருமைக்கு
அறிகுறியாக நின்று விளங்குகின்றது.66 அங்குள்ள கைலாச நாதர் கோவில்
இவளாலே கட்டப்பட்டதாகும். செம்பியன்்